Web Editor

மீண்டும் வேண்டும் துடிப்புள்ள அகார் சேர்

Written by Administrator
  – அனஸ் அப்பாஸ் –
ஜாமிஆ நளீ­மி­ய்யாவின் பிரதிப் பணிப்­பா­ளரும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிரதித் தலை­வ­ரு­மான அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முகம்மத் (நளீமி) அவர்களின் அன்பு மனைவி சுரையா மரிக்கார் அவர்கள் கம்­பளை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற விபத்­தொன்றில் அகால மரணமடைந்தது நீங்கள் அறிந்ததே. விபத்து குறித்த சமூகத்தின் புலனாய்வுத் துலங்கல்கள் முடிவதற்குள்ளேயே அன்­னாரின் ஜனாஸா மாவ­னெல்லை, தெல்­க­ஹ­கொட ஜும்­ஆப்­பள்­ளி­வாயல் மையவாடியில் நல்­லடக்கம் செய்யப்பட்டது.
 
எந்த ஒரு மனிதரையும் நெருங்கிய உறவுகளின் இழப்பு கடுமையாக ஆட்டங்காணவே செய்துவிடும். கண்முன் நடந்த விபத்து எனும் போது அதன் தாக்கம் ஆழமானது.
சுரையா அகார் முஹம்மத் மூன்று பிள்ளைகளின் தாயார் என்பதுடன் அகார் சேரின் அளப்பரிய சேவை செயற்பாடுகளில் மறைகரமாக இருந்து பங்களிப்பு செய்தவர். அண்மையில் மறைந்த ஆதில் பாக்கிர் மாக்காரின் மரணச் சேதி ஒரு முன்மாதிரிமிக்க இளைஞன் எப்படி வாழ வேண்டும் என்பது தொடர்பில் சமூகத்தை உலுக்கி விட்டது. அப்துல்லாஹ் ஹஸரத்தின் மறைவு ஆன்மீக தலைவர் ஒருவர், மூத்த மரியாதைக்குரிய ஒருவரின் சமூகப் பங்களிப்பு சமூகத்தை எந்தளவு பாதித்தது என்பதை எடுத்துக் காட்டியது. தற்போது மர்ஹுமா சுரையா மரிக்கார் அவர்களின் மரணம் ஒரு முன்மாதிரிமிக்க மனைவியினதும், தாயினதும் பங்களிப்பை தெளிவாகக் காட்டுகின்றது. மரணங்கள் மூன்றும் வெவ்வேறு தளங்களில், வயதில் என வேறுபட்டாலும் ஈடற்ற பங்களிப்பு என்ற ஒற்றுமை இங்கு நாம் கவனிக்க வேண்டியதொன்றே!
 
இலங்கை சமூகத்தில் பாரிய ஆன்மீக மற்றும் சேவை பங்களிப்பை செய்துவந்த அகார் சேரின் நிலை குறித்து ஜனாஸா நல்லடக்கத்தின்போது பலரும் மிகுந்த கவலையை வெளியிட்டிருந்தனர். சிறுபான்மை சமூகம் எதிர்கொண்ட சோதனைகளின்போதும், பிரச்சினைகளின்போதும் சமூகத்துக்கு ஆறுதல் கூறிய ஒருவருக்கு யார் இன்று ஆறுதல் கூற முடியும்? உங்களதும், குடும்பத்தினரதும் உறுதியான பொறுமைக்கு இறைவன் சிறந்த கூலியை தருவான் இன்ஷா அல்லாஹ்!
 
இந்த சமூகம் பயணிக்க வேண்டிய தூரம் குறுகினாலும், சவால்கள் குறுகிடாதே! அகார் சேர், மீண்டும் உங்களின் துடிப்புமிக்க உரைகள் எம் உள்ளங்களை பதப்படுத்த வேண்டும், உங்களின் சேவை தொடர்வதே எம் கட்டாயத்தேவை!
 

About the author

Administrator

4 Comments

 • When I came to know about this death my thought went to imam al Shatibi’s words…
  He faced many challenges and problems in his life from religious and political groups ..
  He was put in jail and tortured..
  He was criticised for his religious ideas ..
  He faced many trials in his life ..in front of all this he tells us that
  بليت والبلوي متنوعةالانواع..
  I have been tested and trials are different in kind
  I was saddened to hear this news …
  Every thing happened that quick …
  What a life is this .?.
  So quick to come to end
  But her death left a huge impact on us all
  May Allah forgive her and reward her with Jennath Al Firdaus

 • கடல் கடந்தது வாழ்கின்ற எம்மைப் போன்றவர்களுக்கு அகார் ஷெய்கின் நல்லுபதேசங்களும், பாடங்களும் பெரும் உத்வேகத்தையும் சிந்தனைத் தெளிவையும் தரக்கூடியதாக இருந்தது. அல்லாஹ் அவர்களின் ஈருலக வாழ்விலும் சுபிட்சத்தையும் வளத்தையும் வாரி வழங்க வேண்டும் என துஆ செய்கிறேன். துணைவியாரின் பிரிவு என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதுவும் கண் இமைப்பொழுதில் ஒன்றாக பயணித்துவந்த தம் துணைவியாரை இழந்திருப்பது என்பது மிகப் பெரும் சோகம். அல்லாஹ் விதித்ததைப் பொருந்தி விரைவில் அவர்கள் மனத்தேற்றம் அடைந்து அதே பழைய உத்வேகத்தோடு அவர்கள் இயங்குவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

 • The ocean of the crowd gathered from every hook and corner of the country for the Janasa of the wife of our Usthaz Agar was the clear indicator and testimony of the love and affection of the people of the country towards him irrespective of the differences of different
  schools of thoughts.
  This is a good lesson for the Islamic workers and Daees.
  May Allah recover our Usthaz from his unbearable pain of mind and trauma and return him as old and vibrant Agar sir so that the entire humanity get benefit from him.

 • #கடல் கடந்தது வாழ்கின்ற எம்மைப் போன்றவர்களுக்கு அகார் ஷெய்கின் நல்லுபதேசங்களும், பாடங்களும் பெரும் உத்வேகத்தையும் சிந்தனைத் தெளிவையும் தரக்கூடியதாக இருந்தது#

Leave a Comment