சமூகம் வியாபாரம்

சர்வதேசத்தில் இலங்கையின் முதல் இரத்தினக்கல் சிற்பி பஸீர் ஷம்சுதீன்

Written by Administrator

– அனஸ் அப்பாஸ் –

பfஸீர் ஷம்சுதீன் பிறப்பிலேயே கண்டி, தென்னேகும்புரையையை சேர்ந்தவர். தந்தை ஒரு ஆயுர்வேத வைத்தியர். தந்தை முதுமைப்பருவத்தில் நோய்வாய்ப்பட்டதால் பொருளாதார நெருக்கடியால்தனது கல்வியை NCGE யுடன் (க.பொ.த. சா/ தரத்திற்கு சமனான பரீட்சை) இடைநிறுத்தினார்.

“தந்தையின் சகோதரரான வஹாப் அவர்களின் நண்பரான Mr. இக்பால் மஜீத் அந்த நேரத்தில் “ஷிபாFனி ஜுவலர்ஸ்” இன் கண்டி கிளையில் இருந்தார். அவர் மூலமாக அந்த நிறுவனத்தில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு கிட்டியது. ஆரம்பகட்ட பயிற்சி (TRAINING) கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இடம்பெற்றது. அங்கு GEM CUTTIING தொடர்பான நுட்பங்களை கற்கக் கிடைத்தது. (வைத்தியத்துறையில் வைத்தியர்கள் போல) இரத்தினக்கல் நுட்பங்கள் அறிந்த GEMOLOGISTS மூவர் அங்கு இருந்தனர். அவர்களிடமிருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். 1978 ஜனவரி 2 இல் இணைந்து, கொழும்பில் பணிபுரிய ஆரம்பித்தேன்.1980 இல்எனது ஊரான கண்டியின் பெரிய கிளைக்கு மாற்றம் கிடைத்தது. இங்கு இரத்தினக்கல் வெட்டும் பிரிவுக்கு “Lapidary” பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.” என்றார்

அத்துடன் நின்றுவிடவில்லை இவர். வெளிநாட்டு மொழிகள் கற்பது, இரத்தினக்கல் வர்த்தகம் தொடர்பான கற்கைகள் என தன்னை மேம்படுத்திக்கொண்டார்.தான் இடைநிறுத்தாது கல்வியை தொடர்ந்திருந்தால் MEDICAL FACULTY க்கு தெரிவாகி இப்பொழுது ஒரு வைத்தியராக இருந்திருப்பேன் என்றார்.தனது வாழ்க்கைமுறை மாறிவிட்டபடியால் இரத்தினக்கல் வர்த்தக துறைக்கு தேவையான சுய முன்னேற்ற வேலைகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.

“FRENCH, GERMANY, ITALIAN…. என வெளிநாட்டு மொழிகள் இந்தத் துறைக்கு அத்தியாவசியம். ஆங்கிலம் மிகவும் சரளமாக இருக்க வேண்டும். நான் எனது ஆங்கில அறிவை பட்டை தீட்ட ரோயல் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உதவியைப் பெற்றேன்.

கண்டிக் கிளைக்கு மாற்றியதால் தந்தையிடமிருந்து ஒய்வு நேரங்களில் ஆயுர்வேத வைத்தியமுறைகளைக் கற்க சிறந்த வாய்ப்பாக இருந்தது. ஆயுர்வேதத்திலும் பரீட்சைகளை எதிர்கொண்டேன், இறுதிவருட பரீட்சைக்காக காத்திருக்கின்றேன். பரீட்சை முடிந்ததும் ஒரு வருட பயிற்சிக்காலம்,அதில்ஆயுர்வேத வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிய வேண்டும்.”

“கொழும்பு“ஷிபானி ஜுவலர்ஸ்” தலைமையகத்தில் நிறுவனத்தின் செயலாளர் ஒருவர் இருந்தார். அவர் Mr. மொஹிதீன். என்னை இணைப்பதற்காக தந்தையும் கொழும்பு வந்திருந்தபோது அவர் கண்ட மாத்திரத்திலேயே “நீங்க ஷம்சுதீனா?” எனக் கேட்டார். நீண்ட இடைவெளியின் பின் அவர்களது இள வயது நட்பு மீட்டப்பட்டது. பயிற்சிக்காலத்திலும், அதன் பின்னரும் Mr. மொஹிதீன் எனக்குமிகவும் உதவியாக இருந்தார்.”

“கண்டியில் எமது நிறுவனம் விருத்திகளைக் கண்டது. இரத்தினக்கல் அருங்காட்சியகம்(GEM Museum) ஒன்றை ஆரம்பித்தார்கள். பின்னர் அதில் உள்ள இரத்தினக்கல் வெட்டும் பிரிவுக்கு (Lapidary)பொறுப்பாக நியமிக்கப்பட்டேன். அதற்கு வந்த பின்னர் இரத்தினக்கல் தொடர்பான நிறைய புத்தகங்களை வாசிக்கக் கிடைத்தது. அந்த இரத்தினக்கல் அருங்காட்சியகத்துக்கு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பேராசிரியர் ஸ்பென்சர் கில்ட் என்பவர் சகிதம் ஒரு குழுவினர் வருகை தந்திருந்தனர். எனது வேலைப்பாடுகளைப் பார்த்து அவர் வியந்தார். உங்களிடமுள்ள அசாத்திய திறமைகளை சர்வதேச தளத்தில் நீங்கள் விரும்பினால் மிளிர வைக்கலாம் என்றார். அதுதொடர்பில் ஆர்வமோ, தேடலோ பெரிதாக என்னிடம் அந்த சூழ்நிலையில் இருக்கவில்லை. எனது திறமை தொடர்பானஎண்ணத்தை மிகைத்திருந்தது நான் பணிபுரியும் நிறுவனத்திற்கான எனது உழைப்பு.” என்கின்றார் திருப்தியுடன்.

“இரத்தினக்கல் தொடர்பான வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தேன். இதில் முஸ்லிம்களுக்கு பாரிய பங்களிப்பு இருந்துள்ளது. நாடுகாண் பயணங்களை மேற்கொண்ட இத்தாலியை சேர்ந்த மாலுமி மார்க்கோ போலோ, 1254 இல் சீனா சென்று அன்றைய ஆட்சியாளர் குப்லாய் கான் மூலம் இரத்தினக்கற்களை வாங்குவதற்கு சீன பட்டுப்பாதை ஊடாக இலங்கை வந்தபோது இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமே இரத்தினக்கல் வணிகத்தில் ஈடுபட்டிருந்ததாக “மார்க்கோபோலோ கடல் மார்க்க பயணங்கள்” தொடர்பான நீண்ட வரலாற்று ஆவணத்தில் பதிவாகியுள்ளது.

பிற்பட்டகாலத்தில் இரத்தினக்கல் வணிகம் சமூகத்தில் பரவலாக்கப்படாமைக்குக் காரணம் அந்தத் துறையில் இருந்தவர்கள் தாம் மட்டுமே அனுபவிப்பதற்காக பிறருக்கு அவற்றை கற்றுக்கொடுக்கவில்லை என்றே சொல்லத் தோன்றுகின்றது. இதில் குறைபாடு இருப்பதை உணர்ந்து இரத்தினக்கல் நுட்பங்களை இளம் சமுதாயத்திற்கு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்.கொழும்பில் என்னிடம் கற்றசமூகப் பற்றுள்ளமாணவன் அஷ்ரப். தனது ஊரான கலுகமுவ பள்ளிவாசல் நிர்வாகத்துடன் பேசி, 5 வருடங்களுக்கு முன்னர் இந்தத்துறை தொடர்பாக நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்குமாக கூட்டமொன்றை ஏற்பாடு செய்து, சுமார்80  பேர்க்கு தெளிவொன்றை வழங்க வாய்ப்பை ஏற்படுத்தினார்.அதில் சாதாரண தரம், உயர்தரம் எழுதிய மாணவர்கள் உட்பட வயது ஏற்ற இறக்கங்களுடன் 39 பேர்கொண்ட ஒரு இளைஞர் குழு இத்துறையை கற்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

நான் முன்னர் தொழில்புரிந்த “அமீன் ஜெம்ஸ்” நிறுவனத்தில் ஞாயிறு மட்டுமே விடுமுறை. கற்பித்தல் தேவைகளை குறிப்பிட்டதும் எனக்கு சனி, ஞாயிறு தினங்கள் உத்தியோகபூர்வ விடுமுறை கிடைத்தது. 20 முதல் 54 வயது வரையுள்ள பல குழுக்கள் கற்பதில் ஆர்வம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. பல தரங்களிலும் கற்க வருபவர்கள் இருந்தனர். அவர்களுக்கு மும்மொழியிலும் கற்பித்தேன். ஒன்று முடிந்து வேலைவாய்ப்பைப் பெற்றதும், இன்னொரு குழு என பெரிய திரள் இத்துறையை கற்க ஆர்வம் காட்டிக்கொண்டே வந்தனர். காலப்போக்கில் போக்குவரகுது வசதிகளில் உள்ள சிக்கலால், கடந்த வருடம் நவம்பர் 27 முதல் கண்டி நகரின் மூன்று மாடிக் கட்டிடமொன்றில் மேல் மாடியில் வாடகை அடிப்படையில் ஒரு பகுதியில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன. 5 மாதங்களைக் கொண்ட இப்பாடநெறி சிலபோது ஒருவருடம் வரை நீள்வதும் உண்டு. எனது நேரத்தை மாணவர்களுடன் செலவிட நான் பின்நிற்பதில்லை. 10 ஆவது மாணவர் குழு கற்று வருகின்றனர். உயர்ந்த சம்பளத்தில் வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாட்டில் பணிபுரியும் வாய்ப்பும் பலருக்கு கிட்டியுள்ளது.”

“பேராசிரியர் ஸ்பென்சர் தனது நாட்டுக்கு திரும்பிய பின்னர் பலமுறை கடிதங்களை எனக்கு அனுப்பியிருந்தார். அவற்றை நான் சட்டை செய்யவில்லை. பொறுமையிழந்து கண்டியிலுள்ள உணவகமொன்றின் முகாமையாளரை தொடர்புகொண்டு என்னைப்பற்றி விசாரித்துள்ளார். அது யுத்த காலம் என்பதால் நான் பதில் கடிதம் அனுப்பாத பயத்தில் இருந்துள்ளார். அந்த முகாமையாளர் என்னைத் தேடி நான் பணிபுரியும் நிறுவனத்துக்கே வந்தார். என் மீது அவர் காட்டும் கரிசனையும், திறமை குறித்த நம்பிக்கையும்யதார்த்தத்தை உணர்த்தின.

பின்னர்,உலகின் தலைசிறந்த இரத்தினக்கல் நிபுணர்களுடனும், தகவல்களுடன், விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளுடன் இரத்தினக்கல் தொடர்பான அறிவை சர்வதேச ரீதியாக வியாபிக்க வைக்க பணியாற்றும், பலபாடநெறிகளை முன்னெடுக்கும் United Kingdom Facet Cutters’ Guild (UKFCG) எனும்கல்லூரியின் அங்கத்தவராக என்னை ஆக்கினார் அந்த பேராசிரியர். எனது பதிவிலக்கம் “2013”. இலங்கையின் இரண்டாவது அங்கத்தவன் நான். முதல் இலங்கை அங்கத்தவரான இராமல் டி சில்வா என்ற பெண்மணியும், நானும், அந்த பேராசிரியரும் ஒரு குழுவாக செயற்பட்டோம். ஐக்கியஇராச்சியத்தில் “STONE CHAT” என்று ஒரு இரத்தினக்கல் தொடர்பான சஞ்சிகை வெளிவருகின்றது. எனக்கும் அதில் கட்டுரை எழுதலாம். பேராசிரியர் ஸ்பென்சர் தனது இலங்கை இரத்தினக்கல் அனுபவங்களையும் அதில் எழுதியுள்ளார். குறித்த சஞ்சிகையைநடாத்தும்UKFCG நிறுவனம், ஒவ்வொரு வருடமும் இரத்தினக்கல் வேலைப்பாடுகள் தொடர்பான சர்வதேச போட்டியொன்றை நடாத்துகின்றது. பேராசிரியரின் உந்துதலால் நானும் விண்ணப்பித்தேன். குறித்த போட்டியில் UKயை சேர்ந்த நிபுணர்டின் ஸ்மித் முதலிடமும், சிறு புள்ளிகள் வித்தியாசத்தில் நான் இரண்டாம் இடத்தையும் பெற்றேன். இதனால்எனக்கு ADVANCED CUTTER விருது கிடைத்தது.

அந்த காலத்தில் இலங்கை இரத்தினக்கல் கூட்டுத்தாபனம் கூட இவ்வாறான போட்டிகள் தொடர்பில்அறிந்திருக்கவில்லை.ADVANCED CUTTER ஐத் தொடர்ந்து MASTER CUTTER பரீட்சைக்கும் எனக்கு தகுதி இருப்பதால் போட்டியிட சொன்னார்கள். MASTER CUTTER விருதும் கிடைத்தால் உயரிய விருதான INTERNATIONAL JUDGE எனும் உலகின் தலைசிறந்த விருதுக்கும் போட்டியிடலாம். விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே உலகில்MASTER CUTTERS ஆக இருக்கின்றனர்.

MASTER CUTTER பரீட்சையின் முதல் பகுதியில்80 இற்கு மேல் புள்ளிகள் பெற வேண்டும். பேராசிரியர் தந்த தகவல்களை கற்று 89 புள்ளிகள் பெற்றுள்ளேன். இரண்டாம் பகுதி அவர்கள் தரும் இரத்தினக் கல்லில் வேலைப்பாடுகளை செய்து அனுப்புவது. இன்னும் அதை நான் செய்யவில்லை. இலங்கையில் உள்ள உபகரணரங்கள் இதில் வெற்றிபெற எனது வேலைப்பாடுகளை செய்ய போதாது, அதுமட்டுமன்றி அதற்காக நீண்ட பயிற்சியை நான் மேற்கொள்ள வேலைப்பழு இடம்கொடுப்பதில்லை. பகுதி 2 ஐ நான் விரும்பும் நேரத்தில் விண்ணப்பித்து போட்டியிடலாம்.

எனது வேலைப்பாடுகளில் ஈர்க்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் சொன்னதற்காக அவுஸ்திரேலியாவிலுள்ள போட்டியோன்றிலும் போட்டியிட்டு வென்றுள்ளேன். அதில் குழுக்களாகவும் போட்டியிட்டார்கள். இது தவிரவும் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.”

“எனது தந்தை தொடர்ந்த இலவசமாக ஆயுர்வேத சிகிச்சையளிக்கும் சேவையை நானும் எனது வீட்டில் இலவசமாகவே தொடர்கின்றேன்.

நான் கற்றதை பிறர்க்கு கற்றுக்கொடுப்பதே பாடசாலைக் காலம் முதல் என்னிடமுள்ள பண்பு. பொருளாதார ரீதியான அறிவை நான் தற்போது கற்பிப்பதால் அவர்கள் பயனடைந்து ஸதகா,ஸகாத் கொடுப்பர். அது எனக்கு ஸதகத்துல் ஜாரியாவாக மறுமையில் வந்து சேரும்.

இரத்தினக்கல்லில் விலைமதிக்க முடியாத, அரிதான கற்கள் இருக்கின்றன. இலங்கையில் கிடைக்கும் Blue Sapphire, அண்மையில் கண்டெடுத்த STARSapphire என இப்பட்டியல் நீள்கின்றது. பட்டை வெட்டுதல், தீட்டுதல் மட்டுமன்றி பல வர்ணங்களில் ஜொலிக்கும் கனிப்பொருள் பாறைகளிலும் செதுக்கல்கள் மேற்கொள்ளலாம். இன்னும்எத்தனையோ வேலைப்பாடுகள் செய்யலாம்.

ஆண்களை விட பெண்களே இரத்தினக் கல் வேலைப்பாடுகள் செய்வது பொருத்தம். ஒரு வீட்டில் சகோதரன் இந்த அறிவை பெற்றால், தனது சகோதரிக்கு வேலைப்பாடுகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கொடுக்கலாம். பின்னர் விற்பனை செய்யும் வேலைகளை சகோதரன் முன்னெடுக்கலாம். எமது சமூகத்தில் பெண்கள் தனிமைப்பட்டு இருப்பதால் இத்துறையை விருப்புடன் கற்கும் ஆர்வம் இன்னும் உருவாகவில்லை. பெண் பிள்ளைகளை இத்துறையில் மிளிரச் செய்வதற்கான முன்னெடுப்புக்களும் இடம்பெற்றால் நல்லதொரு சமூக சூழல் உருவாகலாம்.” என்றார்.

இலங்கையில் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களுக்கான தாக்குதல் எம்மை பொருளாதார வீழ்ச்சிக்கு இட்டு செல்லும் என்கின்றனர். உண்மைதான். ஆனால் ஒன்று. பொய், ஏமாற்று கலந்த வியாபாரம் எம்மை அழிவிற்கே இட்டுச் செல்லும். உதாரணமாக, நளீம் ஹாஜியார் அவர்கள் இரத்தினக்கல் மூலம் சமூகத்துக்கு செய்த தொண்டில் ஒரு பகுதியையேனும் தொடர்கின்ற வர்த்தகர்கள் இன்று இருக்கின்றார்கள்? “இறைவன் தந்த அருள்களைக் கொண்டு சமூகத்துக்கு நாம் பயன்படாவிட்டால் எம்மை விட நஷ்டவாளிகள் யார்?” என்கின்றார் தற்போது ISINI GEMS நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் Mr.பFஸீர். மார்க்க ரீதியாக வழிகாட்டல் மேற்கொள்வோர் இன்று தாராளமாக இருக்கின்றார்கள். பொருளாதார ரீதியான வழிகாட்டல்களை வழங்க எமது சமூகத்துக்கு யார்தான் முன்வருகின்றார்கள்?

Image may contain: 1 person, sitting and indoor

About the author

Administrator

Leave a Comment