கல்வி தகவல் களம் பலஸ்தீன

பல்போர் பிரகடனம் கட்டுரைப் போட்டி

Written by Administrator

பலஸ்தீன மக்களின் தலைவிதியை மாற்றியமைத்த, அவர்களின் வாழ்வில் பேரிடியாய் விழுந்த ”பால்போர் பிரகடனம்” மேற்கொள்ளப்பட்ட 100 வருட நிறைவையொட்டி, இலங்கை-பலஸ்தீன் நட்புறவுச் சங்கமும் இலங்கைக்கான பலஸ்தீன தூதரகமும் இணைந்து ”பல்போர் பிரகடனத்தின் பின்னரான பலஸ்தீனின் நீதிக்கான தேடல்” எனும் தலைப்பில் கட்டுரைப் போட்டியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

1500 சொற்களுக்கு மேற்படாமல் தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளில் கட்டுரை வரையப்பட முடியும். கட்டுரையானது பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கும் நீதிக்குமான உரிமைகள் தொடர்பிலான ஆய்வாக அமைவதுடன், பின்வரும் விடயதானங்களையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பலஸ்தீன மக்களின் நிலங்களை யூதர்களுக்கு வழங்க பிரித்தானியாவுக்கு எவ்வகையில் அதிகாரம் கிடைத்தது ?
  • இச்சட்டவிரோத பிரகடனத்தின் பின்புலங்கள்
  • மனிதாபிமானம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச சட்டங்களின் பார்வையில் இச்சட்ட விரோத பிரகடனத்தினால் பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்வில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், உலகளாவிய ரீதியில் அதன் அதிர்வலைகளும்
  • இன்றைய பலஸ்தீன மக்களின் இன்னல்களுக்கு இங்கிலாந்து பதில் கூறுமா ?
  • பிரகடனம் தொடர்பிலும், நீதியின் அடிப்படையில் பலஸ்தீன அமைதிக்கான செல்நெறி தொடர்பிலும் கட்டுரையாளரது தனிப்பட்ட கண்ணோட்டம்

கட்டுரைகள் மூன்று வல்லுனர் குழுக்களினால் மதிப்பாய்வு செய்யப்படும். கட்டுரை ஆய்வுகளுக்கான ஆதாரங்களும் உசாத்துணைகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மொழியிலும் தனித்தனியாக தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்படுவதோடு, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். முதலாம் பரிசாக 60,000 ரூபாவும், இரண்டாம் பரிசாக 40,000 ரூபாவும், மூன்றாம் பரிசாக 20,000 ரூபாவும் வழங்கப்படும்.

கட்டுரைகள் PDF வடிவில் balfour100years@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 02.10.2017 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது கட்டுரைகளின் தட்டச்சுப் பிரதிகள் 110/10, Wijerama Mawatha, Colombo 07 என்ற முகவரியில் உள்ள இலங்கைக்கான பலஸ்தீன் தூதரகத்துக்கு கிடைக்கச் செய்ய முடியும்.

கட்டுரையின் தலைப்பு (01), கட்டுரையாளரின் பெயர் (02), முகவரி (03), தொலைபேசி இலக்கம் (04), மின்னஞ்சல் முகவரி (05), சொற்களின் எண்ணிக்கை (06) ஆகியவற்றை உள்ளடக்கிய முகப்பு அட்டை இணைக்கப்பட வேண்டும்.

மேலதிக விபரங்களை 0112695991 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

About the author

Administrator

Leave a Comment