TECH உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகடங்கு; அரசுக்கு இலாபம்.

Written by Web Writer

சமூக ஊடகடங்கு; அரசுக்கு இலாபம்.

சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். தொழில்நுட்பம், ஈ வர்த்தகம், சுற்றுலாத்துறை போன்றன இதனால் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தடை நீடிக்குமானால் இலங்கையின் பொருளாதாரமும் நாட்டின் நன்மதிப்பும் பின்னடையும் என அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களுக்கு தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள தடையின் பின்னர், இலங்கை தொலைத் தொடரபு ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவுக்கு ஒரு நாளில் 200 மில்லியன் ரூபா சம்பாதித்துள்ளது என ஜப்பானில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேலை தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள சமூக ஊடகடங்கு இன்று 16 உடன் நிறைவு செய்யப்படுவதாக தொலைத்தொடர்பு, டிஜிட்டல் கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைப் பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் பற்றி விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், பேஸ்புக்கில் தகவல்களை கண்காணிக்கப் போவதாகவும், இனவாதத்தைப் பரப்பும் கணக்குகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment