உலக செய்திகள் தகவல் களம் மாணவர் பகுதி

மன அழுத்தத்திற்கு உள்ளாவோருக்கு சிறந்த பாடம் ; ஸ்டீபன் ஹாக்கிங்

Written by Web Writer

மன அழுத்தத்திற்கு உள்ளாவோருக்கு சிறந்த பாடம் ; ஸ்டீபன் ஹாக்கிங்
-பி.எம் முஜிபுர் ரஹ்மான்-

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் காலமான அவருக்கு வயது 76. லண்டன் கேம்பிரிட்ஜ் இல்லத்தில் அவர் மரணமடைந்தார்.

குவாண்டம் கோட்பாடு, அண்டவியல், கருந்துளை குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பங்கு அளப்பரியது. நரம்பியல் நோயால் நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இவர் தனது 21 ஆவத வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார். குணப்படுத்த முடியாத இந்த நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்து கொள்ளும் நிலை இவருக்கு ஏற்பட்டது.

எனினும் மனம் தளராத ஸ்டீபன் ஹாக்கிங் இயற்பியல் ஆராய்ச்சி மற்றும் எழுத்து துறையில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்

சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பல வருடங்களாக பல வியத்தகு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நோபல் பரிசையும் வென்றுள்ளார் இவர்.

உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் தனது விடா முயற்சியால் பல ஆராய்ச்சிகளை செய்து இரண்டாவது ஐன்ஸ்டீன் என அழைக்கப்பட்டார்.

நரம்பியல் நோய் தாக்கியதை அடுத்து ஸ்டீபன் ஹாக்கிங் லூக்காசியன் பேராசிரியராக பணியாற்றிய போது அவரால் சரியாக நடக்க முடியாது, தானே சாப்பிட முடியாது, கீழே சாயும் அவரது தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. அவரது பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஹாக்கிங் அப்போதும் செயலற்றவராக இருக்க விரும்பாமல், முன்பை விட பன்மடங்கு தன்னம்பிக்கையுடன் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

கணிதவியல் நிபுணராகவும் திகழ்ந்தார். அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார்.

இவரது வாழ்க்கை நோய் தாக்கத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருக்கும் சிறந்த பாடம் என்றால் மிகையல்ல.

About the author

Web Writer

Leave a Comment