சமூகம் தகவல் களம் பிரதான செய்திகள்

உலகலாவிய நீர் முகாமைத்துவம்.

Written by Web Writer

உலகலாவிய நீர் முகாமைத்துவம்.
தமிழில். எம். யூ. எம். மனாஸ்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியம் முதல் சோமாலியா வரையான புவியோடானது வரண்டு வெடிப்புக்கள் ஏற்படக்கூடிய நிலைக்கு உட்பட்டிருக்கும் ஒரு பேனர்த்தத்திற்கு இன்று நாம் முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரும் நதிகளுள் இரண்டாவதாக கருதப்படுகின்ற சீனாவின் ‘யோன்க்டிஸ்’ நதியின் நீர்மட்டம் இளவேனில் காலத்தில் அந்நதியைச் சூழ வாழ்கின்ற 4 லட்சம்பேர் குடிநீரை இழந்து தவிக்கும் அளவுக்கு வற்றிப் போனது. அக்குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நீர்த்தேக்கத்தின இராட்சத வான்கதவுகள் அனைத்தையும் திறந்துவிட வேண்டிய நிலைக்கு சீன அரசாங்கம் உற்பட்டது.

மறுபுறத்தில் 60 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிகக்கடுமையான வரட்சிக்கு கிழக்காபிரிக்கா உட்பட்டுள்ளது. அமேரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 1.7 மில்லியன் ஹெக்டயர் அளவான புல்வெளிகள் முற்றுமுழுதாக அழிந்து நாசமாயின. இதனால் பாதிக்கப்பட்ட கால்நடைகள், விவாசாய நடவடிக்கைகளினால் அமேரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்பு 5 பில்லியன் டொலர்களை விட அதிகம்.

நீர்த்தட்டுப்பாடு.

எதிர்வரும் காலங்களில் புவியின் காலநிலை மேலும் மோசமடையக் கூடியதாக இருக்கும் என அமேரிக்காவின் ஆராய்ச்சி நிறுவனமான ‘மெகன்ஸி’ குறிப்பிடுகின்றது. 2030 ஆம் ஆண்டாகின்றபோது உலக மக்களின் குடிநீர்த்தேவையில் 60% ஆன பகுதியையே ஈடுசெய்யமுடியுமாக இருக்கும் என அது குறிப்பிடுகிறது.

எனவே இந்த கேள்வி நிரம்பலுக்கு இடையிலான இடைவெளியினை ஈடுசெய்வதற்காக வேண்டி எதிர்காலத்தில் 50-60 பில்லியன் அமேரிக்க டொலர்களை செலவிட வேண்டி வரும். இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் புவியில் காணப்பட்ட நீரினளவே இன்றும் காணப்படுகிறது என கலிபோர்னிய பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் துறை பேராசிரியர் ‘ஜேம்ஸ் பெமிக்லேட்’ குறிப்பிடுகின்றார். ஆனால் இன்றைய தட்டுப்பாட்டிற்கு காரணம் பூமியில் உள்ள நீரின் அளவில் ஏற்பட்ட குறைவு அல்ல. மாற்றமாக குடிநீரினை வேண்டிநிற்கின்ற புவிவாசிகளின் சனத்தொகை 250மூ இனால் அதிகரித்தமை என்கிறார்.

காலநிலை மாற்றத்தினைத் தொடர்ந்து நீர் வளமானது புவியின் பல்வேறு இடங்களை நோக்கி நகர்வடைகின்றது. சனத்தொகை அதிகமாக உள்ள பிரதேசங்களில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கஷடம் ஏற்படுவது இதனாலேயே என பேராசிரியர் ‘ஜேம்ஸ் பெமிக்லேட்’ குறிப்பிடுகின்றார்.

கடந்த காலங்களில் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டபோது நாம் செய்ததொல்லாம் நிலக்கீழ் நீரினைப் பெற்றுக்கொள்வதற்காக ஆழமான குழாய்க்கிணறுகளை அமைத்ததும், ஆறுகளை மறித்து அணை கட்டியதுமேயாகும். இவ்வாறு நீரினை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்ததனால் அது எமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வளமாக அப்போது எவருக்கும்; தெரிந்திருக்கவில்லை. சிரமமின்றி இலகுவாக குடிநீரினைப் பெற்றுக்கொண்ட காலம் முடிவடைந்து விட்டதாக ‘பசுபிக்’ நிறுவனத்தின் பூகோளவியல் பேராசிரியரான ‘பீட்டர் க்ளேக்’ தெரிவிக்கின்றார்.

நீர்ப்பாதுகாப்பின் நவீன வழிமுறைகள்.

எது எவ்வாராயினும் நீர்ப்பாதுகாப்பு மற்றும் அது தொடர்பான நவீன வழிமுறைகள் உலகில் மிக வேகமாக பரவி வருகின்றமையை ஒரு நற்செய்தியாகக் கொள்ளலாம். இந்தியாவின் பஞ்சாப் பிரதேசத்தில் வசிக்கும் சோள மற்றும் நெல் விவசாயிகள் 6500 பேர் தமது விளைநிலங்களில் ஈரப்பதனை அளவீடு செய்வதற்காக ‘டென்சியோ மீட்டர்’ எனும் கருவியை பயன்படுத்துகின்றனர். இந்த வழிமுயைறையானது பயிர்ச்செய்கைக்காக வேண்டி தேவைக்கதிகமான நீரினை பயன்படுத்துவதனை விட்டும் தடுப்பதற்கான ஒரு வழிமுறையாக காணப்படுகின்றது. இந்த ‘டென்சியோ மீட்டர்’ ஒன்றின் விலை 7 அமெரிக்க மொலர்களாகும். ‘டென்சியோ மீட்டரை பயன்படுத்துவதனால் இந்திய விவசாயிகளுக்கு தமது விவசாயத்திறகு பயன்படுத்துகின்ற நீரினை 2010 ஆம் ஆண்டு 22 % த்தினால் குறைத்துக்கொள்ள முடிந்துள்ளது.

எனவே ‘டென்சியோ மீட்டர்’ போன்ற கருவிகளை அறிமுகப்படுத்துவதனால் நீரினை மிச்சப்படுத்துகின்ற சாத்தியப்பாடுகள் எமக்குண்டு.

மலசலகூட நீரினை மீள்சுழற்சிக்குற்படுத்தல்.

ஒரு தடவை மலசலகூடத்தில் தங்கிய நீரினை மீண்டும் குடிநீராக மாற்ற முடியும் எனக்கூறினால் அதனைக் கேட்டுக் கொண்டிருப்பவரது உடல் மயிர்கூர்ச்செரிந்தால் அதில் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. எனினும் நமீபியாவில் இது மிகவும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது. மணல் மற்றும் காபன் துணிக்கைகள் உள்ளடக்கப்பட்ட மிக மெல்லிய வடிகள் மூலமாக மலசல கூட நீரில் காணப்படும் அசுத்தங்களை உரிய முறையில் அகற்றுகின்ற தொழிநுட்பத்தினை நமீபியா ‘கெரன்கெப்’ நீர்த்திட்டத்தின் மூலம் 1968 இல் அறிமுகப்படுத்தியது.

மனித மயிரின் 100ஃ1 அளவு மிக நுண்ணிய துளைகள் ஊடாக கடைசிக்கட்டத்தில் வடித்தெடுக்கப்படுகின்ற இந்த நீரினை குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கு அனைத்து நமீபியர்களும் பழக்கப்பட்டுள்ளனர். நமீபியாவின் தலைநகரான ‘வின்டிகோக்’ இல் ஒருலட்சம் குடிமக்களுக்கான 7.6 பிலியன் லீட்டர் நீரினை இவ்வாறு சுத்திகரித்து வழங்குவதன் ஊடாக தனது 33% ஆன கேள்விக்கு நிரம்பல் செய்ய அந்நாட்டு நீர்வழங்கள் மத்திய நிலையத்திற்கு முடியுமாக இருக்கின்றது.

நமீபியாவின் அனுபவத்திகை முன்மாதிரியாகக் கொண்டு அமேரிக்காவின் கலிபோர்னிய பிராந்தியம் அதனுடைய வடிகால் மற்றும் மலசலகூட நீரினை மீள்சுழட்சிக்குற்படுத்தும் திட்டத்தினை 2008 இல் ஆரம்பித்தது. இத்திட்டத்தின் மூலமாக அவர்கள் வீணாகாமல் பாதுகாத்துக்கொண்ட நீரின் அளவு 265 மில்லியன் லீட்டர்களாகும். சிம்பாபே தலை நகரான ‘ஹராரே’ யில் வடிகால் மற்றும் மலசலகூட நீரினை மீள்சுழட்சிக்குற்படுத்தும் திட்டத்தினை ஆரம்பித்தது.

கடல் நீரின் உவர்ப்பினை நீக்குதல்.

புவி மேற்பரப்பில் படர்ந்துள்ள சமுத்திரங்களின் நீர், அவற்றில் உள்ள உவர்ப்பினை நீக்குவதன் மூலம் அந்நீரினை மனித பயன்பாட்டிற்கு பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அவுஸ்திரேலியாவின் ‘பர்த்’ நகரினைச் சூழவுள்ள 15000 கடல் நீர் சுத்தகரிப்பு நிலையங்களை பார்க்கின்றபோது புரிந்துகொள்ள முடியுமாக இருக்கிறது. கடல் நீரின் உவர்ப்பினை நீக்கி இந்த 15000 நிலையங்கள் மூலமாக அவர்கள் ஒருநாளைக்கு பெற்றுக்கொள்கின்ற குடி நீரின் அளவு 64 பில்லியன் லீட்டர்களாகும்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரதான நகரான ‘பர்த்’ இச்சுத்தகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடத்துவங்கியது 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் வரட்சியும், அதனைச் சூழவிருந்த நீர்நிலைகள் அனைத்தும்போல் விரைவாக வரண்டதும் அதற்குக் காரணமாகும். ‘பர்த்’ நகரம் அதன் வருடாந்த நீர்த்தேவையான 363 பில்லியன் லீட்டரில் 3ஃ1 ஐ கடல் நீர் சுத்திகரிப்பு மூலமாக பெற்றுக்கொள்கிறது. அவுஸ்திரேலியாவின் இந்த கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் செயற்படுவது சூழலுடன் ஒருங்கினைந்த காற்றாடி மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள் மூலமாகும் என்பது விஷேட அம்சமாகும்.

இஸரேல், மத்தியகிழக்கின் சில நாடுகள் மற்றும் அமேரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியம் போன்றன தற்போது அதிகளவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டு நடத்துகின்றன, எனினும் கழிவு நீரினை மீள்சுழற்சிக்குற்படுத்துவதற்கான செலவுடன் ஒப்பிடும்போது இவற்றின் செலவு 5 மடங்கு அதிகமானதென்பது தெளிவாகின்றது. எனினும் 2011 ஜூலை மாதமளவில் ‘சீமன்ஸ்’ நிறுவனத்தினால் மனித சிறுநீரகத்தில் இடம்பெறுகின்ற இரசாயனவியல் வடிகட்டல் முறைமையை ஒத்த கடல்நீரின் உவர்ப்பினை அகற்றுகின்ற நவீன வழிமுறை ஒன்று கண்டுபிடிக்கபட்டது. இந்த நவீன தொழிநுட்பத்தின் மூலம் கடல்நீரினை சுத்திகரிப்பதற்கு செவிடுகின்ற சக்தியை அரைவாசியாக குறைக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வருடாந்த மழைவீச்சி 97 சென்றிமீட்டர் பதிவாகின்ற தென் இந்தியாவின் பெங்களூர் கூட நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது. பெங்களூரின் நீர்த்தேவையின் 40% த்தினை பெற்றுக்கொடுத்த 2000 கிணறுகள் இன்று முற்றாக தூர்ந்துபோயுள்ளன. 2400 சதுர அடிகளுக்கு மேற்பட் அனைத்து வீடுகள் மற்றும் காரியாலயங்கள் தமது தேவைக்கான நீரினை பெற்றுக்கொள்வதற்காக மழைநீரினை கட்டாயமாக சேமிக்க வேண்டும் என்ற சட்டத்தினை பெங்களூரின் பிராந்திய அரசு 2009 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. அதிலிருந்து இரண்டு ஆண்டுகள் கடப்பதற்குள் 60000 வீடுகளில் வெற்றிகரமாக இந்நீர் சேகரிப்புத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

பிராந்திய அரசு மழைநீரினை நல்லமுறையில் வடிகட்டி சேமிப்பதற்கான நீர்த்தாங்கிகளை பெங்களூர் நகர மக்களுக்ககு சகாயவிலையில் வழங்கியது மாத்திரமல்ல இந்த நீர்த்திட்டத்தில் பங்குகொள்கின்ற பங்குதாரர்களுக்கு 2% வரிச்சலுகையையும் வழங்கியது. பெங்களூர் மழைநீர் சேமிப்புத்திட்டத்தின் உருவாக்குனர் ஏ. ஆர். சிவகுமார் அவர்கள் ‘எதிர்வரும் சில வருடங்களில் நகரின் நீர்த்தேவையின் 40% த்தினை இத்திட்டத்தின் மூலம் ஈடுசெய்யமுடியும்’ எனக்குறிப்பிடுகின்றார்.

சிங்கப்பூர்.

நீர் விநியோகத்திற்காக வேண்டி மேற்சொன்ன அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப்படுததுகின்ற நாடாக சிங்கப்பூர் திகழ்கின்றது. வருடாந்த மழைவீழ்ச்சி 2.54 சென்றிமீட்டர் பெறும் சிங்கப்பூர், வடிகால்களில் விழும் ஒரு துளி மழை நீரையேனும் வீணாக விடாமல் அதனை குடிநீராக மீள்சுழற்சிக்குற்படுத்தும் மேம்பட்ட தொழிநுட்பத்தினை பயன்படுத்துகின்றது.

நதிகளை மறித்து அணைகட்டுவதன் மூலமாக குடிநீரினைப் பெற்றுக்கொள்ளும் 17 நீர் நிலையங்களை சிங்கப்பூர் கொண்டுள்ளது. அவர்கள் தமது நீர்த்தேவையின் 10% த்தினை கடல்நீர் சுத்திகரிப்பு மூலமாக ஈடுசெய்கின்றனர். நாட்டினது அனைத்து காரியாலயங்களினதும், வீடுகளினதும் மலசலகூட மற்றும் ஏனைய கழிவுநீர் வெளியாகும் வடிகால்களை 48 கிலோமீட்டர் நீளமான நிலக்கீழ் சுரங்கம் ஒன்றுடன் நேரடியாக இணைத்துள்ளனர். இச்சுரங்கமானது புற ஊதாக்கதிர்த் தாக்கத்தினைக் கொண்டு கழிவு நீரினை மீள்சுழற்சிக்குற்படுத்துகின்ற ‘சிலிக்கன்-வேபர்’ நிலையங்கள் நான்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் சுத்திகரிக்கப்படும் நீர் குடிப்பதற்காகவும், நாட்டின் குளிரூட்டிகள் (A/C) தொழிட்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதனாலேயே சிங்கப்பூர் உலகின் மிகப்பெரும் நீர்ப்பாதுகாவலனாக அறியப்பட்டுள்ளது.

இலங்கை இதுவரை மிகமோசமான நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ளாவிடினும், நாட்டின் காலநிலை பாரிய மாற்றங்களுக்குற்பட்டு வருவது தெரிந்ததே. எனவே மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் பற்றி மிக ஆழமாக ஆராய்ந்து எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தினை பாதுகாப்பதற்காக இப்போதிருந்தே நாம் ஒன்றுபட்டுழைக்க வேண்டும்.

மூலம்: ராவய

About the author

Web Writer

Leave a Comment