Scholarship Youth கலை

தேசிய இளைஞர் மாநாடு 2018

Written by Web Writer

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர்கள் மன்றம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள ‘தேசிய இளைஞர் மாநாடு’ ஏப்ரல் மாதம் 20 ஆம் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. இது குறித்து, இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் பணிப்பாளர் பேராசிரியர் W.A.D.P வனிகசுந்தர அவர்கள், ‘நடைபெறவுள்ள இந்த தேசிய இளைஞர் மாநாடு (NYS 2018),  நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்தியில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்கான கூட்டு அழுத்தம் ஒன்றை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்தார்.

சமாதானத்தைக் கட்டியெழுப்ப முயற்சியெடுக்கும், இலங்கை இளைஞர்களுக்கு உரையாடுவதற்கான ஒரு களத்தை உருவாக்குவதற்காக வேண்டியே NYS ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் வகிபாகத்தை பிரதிபலிக்கச் செய்வதே இதன் நோக்கமாகும். கூட்டான மற்றும் வினைத்திறன்மிக்க சமாதானத்தை கட்டியெழுப்ப அவர்களது புத்தாக்கம்மிக்க கருத்துக்களை பகிர்வதற்கான ஊக்குவிப்புகள் இதன்போது வழங்கப்படவுள்ளன.

நடைபெறவுள்ள NYS 2018 மாநாட்டில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வித்தியாசமான பல்வேறு மதங்களை, இனங்களைச் சேர்ந்த சுமார் 250 இளைஞர் யுவதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் மற்றும் அதன் ஒரு செயற்திட்டமான இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டத்தின் போது அணுசரனை வழங்கிய தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய, மேற்கு மற்றும் தென் மாகாண கல்வி அமைச்சுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் கட்புல அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த தேசிய இளைஞர் மாநாட்டை ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment