உள்நாட்டு செய்திகள்

ராமாஞ்ஞ பீடத்தின் உயர்பதவிகளில் கரு, லஸன்த

Written by Web Writer

ராமாஞ்ஞ பீடத்தின் உயர்பதவிகளில் கரு, லஸன்த

இலங்கை ராமாஞ்ஞ மகா பீடத்தின் பீடப்பாதுகாப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரியவும், பொதுச் செயலாளராக நிதி, ஊடக பிரதி அமைச்சர் லஸந்த அலகியவன்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசபந்து கரு ஜயசூரிய 2006 ஆண்டு முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார் என்பதோடு, அமைச்சர் லஸந்த அலகியவன்ன 2006 ஆம் ஆண்டு முதல் குறித்த சபையின் தேசிய அமைப்பாளராகவும், பிரதித் தலைவராகவும் கடமையாற்றி வந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ராமாஞ்ஞ பீடத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற விஷேட வருடாந்தக் கூட்டத்திலேயே இவர்கள் குறித்த பதவிகளில் நியமிக்கப்பட்டனர்.

இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் அபிவிருத்திக்கான பல வேலைத்திட்டங்கள் முன்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவிருப்பதாக இலங்கை ராமாஞ்ஞ மகா பீடத்தின் பீடப்பாதுகாப்பு சபையின் பொதுச் செயலாளர் அமைச்சர் லஸந்த அலகியவன்ன தெரிவித்தார்.

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பல பௌத்த பீடங்களில் ராமாஞ்ஞ பீடம், மியன்மாரிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகும்.

About the author

Web Writer

Leave a Comment