Scholarship உள்நாட்டு செய்திகள் கலை

கலாபூஷண விருது – 2018 : விண்ணப்பம் கோரல்.

Written by Web Writer

அரச கலாபூஷண விருது 2018 : விண்ணப்பம் கோரல்.

இலங்கையின் கலை இலக்கியத்துறைகளுக்கு அளப்பெரும் பங்காற்றிவரும் கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு வருடந்தோறும் அரசின் உயர்விருதான கலாபூஷணம் விருது வழங்கப்படுகின்றது.

முஸ்லிம் கலைஞர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு உரியதாகும். அறுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் மட்டுமே இவ்விருதினைப் பெறுவதற்கான தகைமையுடையவர்களாவர். ஓவியம்,வாய்ப்பாட்டு, தவில்,நாடகம், சினிமா, நாட்டுப்புறவியல், இலக்கியம், ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளில் மிகவும் சிறப்புறச் சேவையாற்றியவர்கள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

அந்தவகையில், 2018ஆம் ஆண்டிற்கான 34ஆவது அரச கலாபூஷண விருது வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே, கலைத்துறைக்கு பங்களிப்புச் செய்துவரும் தகுதியான முஸ்லிம் கலைஞர்களையும் விண்ணப்பிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருகின்றது.

குறித்த விருதுக்காக விண்ணப்பிப்பவர்கள் 2018.12.15 ஆம் திகதி 60 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்ணப்ப முடிவுத் திகதி 2018.06.30 ஆம் திகதியாகும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், தங்கள் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே, தகுதியானவர்கள் காலதாமதமின்றி குறித்த விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து இல.180,ரி.பி.ஜாயா மாவத்தை, கொழும்பு 10. எனும் விலாசத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்ப முடியும். அல்லது நேரடியாகவோ திணைக்களத்தில் கையளிக்கலாம்.

About the author

Web Writer

Leave a Comment