Youth உள்நாட்டு செய்திகள் விளையாட்டு செய்திகள்

50 ஆவது தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டி.

Written by Web Writer

50 ஆவது தேசிய கரம் சம்பியன்ஷிப் போட்டி

இலங்கை கரம் சம்மேளனத்தின் அனுசரணையில் நடைபெற்ற 50ஆவது தேசிய கரம் சம்பியன்யன்ஷிப் போட்டியின் 40 வயதிற்குட்பட்ட கரம் சம்பியன்ஷிப் போட்டியினை கொஹுவல கரம் சம்மேளனம் நடாத்தியது. இந்தப்போட்டி ஆண்களுக்கான ஒற்றைப் பிரிவு, பெண்களுக்கான ஒற்றைப் பிரிவு என்ற அடிப்படையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றைப் பிரிவில் 15 தடவைகள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்த சமில் குரே இம்முறையும் சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

மகளிருக்கான ஒற்றைப் பிரிவில் கடற்படை வீராங்கனை ஜோசப் ரெசிடா கிண்ணத்தை கைப்பற்றினார். வெற்றியீட்டிய போட்டியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கும் வைபவம் கொழும்பு ஹில்டன் ரெசிடன்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தெமட்டகொடை விளையாட்டுக்கழகத்தின் செயலாளர் எம்.இசட்.எம். ஜபர் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

About the author

Web Writer

Leave a Comment