உலக செய்திகள் சர்வதேசம் வியாபாரம்

குவைத் பணியாளர்கள் மீது புதிய வரி

Written by Web Writer

குவைத் பணியாளர்கள் மீது புதிய வரி

குவைத்தில் பணி புரியும் வெளிநாட்டுப் பணியாளர்களிடம் குவைத் அரசாங்கம் அறவிடத் தீர்மானித்துள்ள புதிய வரியினால் அந்நாட்டில் பணிபுரியும் பல்லாயிரக் கணக்கான இலங்கையர்கள் பாதிப்புக்குள்ளாகவுள்ளனர்.

புதிய வரி தொடர்பான யோசனை குவைத் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையின் படி 90 தீனார் வரை வேதனம் பெறும் ஊழியர்கள் தமது சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்பும் போது 01 வீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். இவ்வாறாக பெறும் வேதனத்துக்கு ஏற்ப 5 வீதம் வரை வரியாகச் செலுத்த நேரிடுகிறது.

குவைத்திலுள்ள வங்கிகளும் பணப்பரிமாற்ற நிலையங்களும் பணத்தை நாட்டுக்கு அனுப்பும் போது இந்த வரியை அறவிடும். இந்த வரியை அறவிடத் தவறும் வங்கிகள், பணப்பரிமாற்று நிலையங்கள் மீது அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கிகள் அல்லது பணப்பரிமாற்று நிலையங்களுக்கூடாகவல்லாது சட்டவிரோதமான முறையில் தமது வேதனத்தை நாட்டுக்கு அனுப்பும் பணியாளர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கவும், இருமடங்கு அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் குவைத் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் சட்டமாக வரையப்படவுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment