உள்நாட்டு செய்திகள் சமூகம் வியாபாரம்

கலையிழந்தது நுவரெலியா!

Written by Web Writer

கலையிழந்தது நுவரெலியா! சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

நுவரெலியாவிற்கு வருகை தரும் ஏப்ரல் பருவ சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரியளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கண்டியில் இடம்பெற்ற இனத்துவேச வன்முறைகள் காரணமாகவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது நுவரெலியாவிற்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் இந்தப் பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பஸார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.

About the author

Web Writer

Leave a Comment