உள்நாட்டு செய்திகள் சமூகம் நாடுவது நலம்

இஸ்லாம் தொடர்பில் மாற்று மதத்தவர்களுக்கு தெளிவுபடுத்தாமையே இலங்கையில் இனவாதத் தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம்.

Written by Web Writer

இஸ்லாம் தொடர்பில் மாற்று மதத்தவர்களுக்கு தெளிவுபடுத்தாமையே இலங்கையில் இனவாதத் தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணம்.

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

கடந்த சில வருடங்களாக விஷேடமாக தம்புள்ள பள்ளிவாசல் பிரச்சினை ஆரம்பித்தது முதல் இன்று நாட்டில் உருப்பெற்றுள்ள மோதல் நிலைமைகள் வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இலக்கு வைத்து இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தாக்குதல்களை இஸ்லாமியப் பார்வையில் நோக்குகையில் அதற்குரிய பிரதான காரணம் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவுகளை வழங்காமையாகும்.

பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களும் சிந்தனையாளர்களும் இதன் அவசியம் குறித்து நீண்டகாலமாவே எமக்கு சொற்பொழிவுகளை செய்துவருகின்ற போதிலும் இஸ்லாமிய மத அமைப்புகள் உள்ளிட்ட முஸ்லிம்கள் தங்களுக்குள்ளால் மாத்திரம் சில வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனரே ஒழிய இந்நாட்டில் வசிக்கின்ற மாற்று மதத்தவர்களுக்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கமைப்பில் இஸ்லாத்தை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களில்லை. இதன் விளைவையே நாம் அனுபவித்து வருகின்றோம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சிதைந்து போன இஸ்லாமிய கிலாபத் ஆட்சியின் பின்பு வாழ்ந்த முஸ்லிம்கள் அதன் விளைவாக அரசியல் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியில் முகம்கொடுத்து வந்த கஷ்டமானதொரு சூழலில் இஸ்லாம் மிக வேகமாக பரவ ஆரம்பித்து, முஸ்லிம்கள் மீண்டும் அல்குர்ஆன், சுன்னா வழிமுறையில் பிரவேசிக்கலானார்கள். இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம்கள் மத்தியிலும் இந்த நிலையை கண்டுகொள்ள முடிந்தது. இது தவிர இன்னும் பல மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தின் பால் கொண்டிருந்த ஈர்ப்பில் இஸ்லாத்தை தழுவிக்கொண்டார்கள்.

இவ்வாறானதொரு சூழலில் இஸ்லாம் தொடர்பானதொரு புரிந்துணர்வை பெற்றுக்கொள்வதற்கு சிங்கள மக்களும் முனைப்புக்காட்ட ஆரம்பித்தார்கள். அதற்கொப்பான வகையில் மேலெழுந்த இஸ்லாமிய எதிர்ப்பலைகள் அதனை குரோதமாகப் பார்த்தார்கள். இதற்கு முன்பு எவ்வகையிலேனும் அல்குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பில் எழுதப்பட்ட புத்தகங்களை வாசிப்பதற்கு ஆர்வம் காட்டாத பௌத்த துறவிகள் உள்ளிட்ட பெரும்பான்மையினர் இஸ்லாம் பற்றிய தெளிவுகளை பெற்றுக்கொள்வதற்கும் அது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை சமூகமயப்படுத்துவதற்கும் முன்வந்தார்கள்.

எனினும் நாம் தெளிவான முறையில் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் இஸ்லாம் தொடர்பில் அவர்கள் எத்தகைய மூலாதாரங்களிலிருந்து புரிதல்களை பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றியாகும். சீ.என்.என் மற்றும் பொக்ஸ் போன்ற சியோனிஸ ஊடகங்களுக்கூடாக அல்லது இஸ்லாமோபோபியாவை முதன்மையாகக் கொள்பவர்களிடமிருந்தே பொதுபல சேனா போன்ற அமைப்புக்களும் சில சிங்கள மக்களும் இஸ்லாம் தொடர்பில் பிழையான புரிதலொன்றை பெற்று, இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

உதாரணமாக பொதுபல சேனா உள்ளிட்ட அமைப்புக்களும் சாதாரண சிங்கள சிங்கள மக்களும் ஜிஹாத் குறித்தும் ஹலால் குறித்தும் தெறிந்துகொள்வதற்கு சம்பிக்க ரணவக்க எழுதிய இஸ்லாம் தொடர்பில் திரிபுபடுத்தப்பட்ட விளக்கங்களை சுமந்துள்ள நூலையே வாசிக்கிறார்கள். உலகம் பூராகவும் மிக வேகமாகப் பரவி வருகின்ற இஸ்லாம் குறித்த அச்சத்தின் காரணமாக முஸ்லிம்களை பலவீனப்படுத்தும் நோக்கில் பல பில்லியன் கணக்கிலான டொலர்கள் அல்லியெறியப்பட்டு இயங்கி வருகின்ற சக்திகள் அதற்கு உரிய காலத்தில் பசளையிடும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

உதாரணத்திற்கு, இலங்கையில் தான் விரும்பிய எந்தவொரு ஆடை அலங்காரத்தையேனும் அணிந்துகொண்டு பயணிப்பதற்கான சுதந்திரம் காணப்பட்டது. பெண்கள் குளியல் ஆடையை உடுத்தி கடற்கரையோரத்தில் அல்லது வீதியில் பயணிக்கின்ற போது அதைக் காண்கின்ற இளைஞர்களுக்குள் இயல்பாகவே தோன்றும் ஹோமோன் செயற்பாட்டின் தாக்கத்தை ஒருபோதும் பிரச்சினையொன்றாகக் கொள்ளாத நிலையில் தங்களது முகத்தை மூடிக்கொண்டு வினயமாக வீதியில் பயணிக்கின்ற முஸ்லிம் பெண்களால் நாட்டிற்கும் இனத்திற்கும் பாதிப்பேற்படலாம் என நினைப்பது வெரும் போலி ஜோடிப்பாகும் என்பதோடு அதில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. ஆனால் முஸ்லிம் பெண்களைப் போன்று ஆடை அணிந்து வினயமான முறையில் தமது உடல் தெரியப் பயணிக்கின்ற கத்தோலிக்க சகோதரிகளால் நாட்டிற்கு எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.

தர்க்க ரீதியான அறிவும் (Logic), பொது அறிவும் (General Knowledge) மூடி மறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிந்தனைகள் ஒருபோதும் மனிதச் சிந்தனைகள் அல்ல என்பதுடன், அது மனிதனாலேயே உருவாக்கிக்கொள்ளப்பட்ட போலியான கற்பனைகளாகும். அவர்கள் இஸ்லாத்தை பற்றி எவ்வாறான பார்வையை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள இது சிறந்ததொரு சான்றாக உள்ளது.

தொடரும்..

About the author

Web Writer

1 Comment

Leave a Comment