Youth விளையாட்டு செய்திகள்

குமார சங்கக்காரவுக்கு FICA ஆலோசகர் பதவி

Written by Web Writer

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FICA) ஆலோசனைக்குழு உறுப்பினராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள தொழில்சார் கிரிக்கெட் வீரர்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து நாடுகளினதும் தேசிய வீரர்கள் சங்கங்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து 1998 ஆம் ஆண்டு FICA நிறுவப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் வீரர்களின் பொது நலன்கள் தொடர்பான விடயங்களில் இந்த சர்வதேச அமைப்பு அவதானம் செலுத்துகிறது.

FICA வீரர்கள் ஆலோசனை குழு:
ரொஸ் டெய்லர் (நியூசிலாந்து)
ஜேசன் ஹோல்டர் (மேற்கிந்திய தீவுகள்)
வில்லியம் போர்டபீல்ட் (அயர்லாந்து)
சகீப் அல் ஹஸன் (பங்களாதேஷ்)
ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா)
ஜே.பி. டுமினி (தென்னாபிரிக்கா)
கைல் கோட்சயர் (ஸ்கொட்லாந்து)
குமார் சங்கக்கார (இலங்கை)
விக்ரம் சொலங்கி (FICA தலைவர் – இங்கிலாந்து)
கிராம் ஸ்மித் (FICA சுயாதீன குழு உறுப்பினர் – தென்னாபிரிக்கா)
டொம் மப்பட் (FICA தலைமை செயற்பாட்டு அதிகாரி)

About the author

Web Writer

Leave a Comment