ஆரோக்கியம் சமூகம்

உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய்

Written by Web Writer

உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய் காணப்படுகிறது. இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதி தேவனீ ரணவீர தெரிவித்துள்ளார். இந்த நாடுகளுக்குச் சென்று, நாடு திரும்பும்போது இரத்தப் பரிசோனையை மேற்கொள்வது கட்டாயமாகும்.

மலேரியா நோய் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சைக்கு அல்லது அதன் பின்னரான சிகிச்சை தொடர்பில் தேவையான ஆலோசனைகள் அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு 0117-626626 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மலேரியா நோய் ஏற்பட்ட நபர்கள் ஒரு வருடத்திற்குள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், மலேரியா நோய் தொடர்பில் அவசியம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதி தேவனீ ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை 2012ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மலேசியா நோயற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment