TECH ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் சமூகம்

சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் கழிவுகளின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது : மத்திய சுற்றாடல் அதிகார சபை

Written by Web Writer

மீள்சுழற்சி செய்ய முடியுமான LDP  (Low Density Polythene) பொலித்தீன் பாவனையை அறிமுகப்படுத்தியதன் மூலம் அன்றாடம் இலங்கையில் பாவிக்கப்படும் பொலிதீனின் அளவு மெற்றிக்டொன் 60-70 வரை தற்போது குறைந்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய கணிப்பீட்டு அறிக்கை குறிப்பிடுகின்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிக்கைப்படி சென்ற வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை இலங்கையில் அன்றாடம் 115 மெற்றிக் டொன் பொலித்தீன் பாவனையில் இருந்தது. இவையனைத்தும் சுற்றுச் சூழலில் கழிவுகளாக எறியப்பட்டன.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அறிவுறுத்தலின் பிரகாரம் சட்ட ஒழுங்கினைப் பின்பற்றி தயாரிப்பதற்கு பொலித்தீன் சார் உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பான பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை செயற்படுவதாக அதன் பிரதிப் பணிப்பாளர் உபாலி கருணாரத்ன அவர்கள் தெரிவித்தார்.

உலகம் பூராகவும் வருடத்திற்கு 5 டிரில்லியன் அளவு பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment