Youth சமூகம் மாணவர் பகுதி விளையாட்டு செய்திகள்

புட்போல் 4 ப்ரெண்ட்ஷிப் இலங்கைப் பிரதிநிதியாக அயான் ஸதாத்

Written by Web Writer

புட்போல் 4 ப்ரெண்ட்ஷிப் இலங்கைப் பிரதிநிதியாக அயான் ஸதாத்

12 வயதான அயான் அன்வர் சதாத், தினூக பண்டார ஆகியோர் இலங்கைக்கான பிரதிநிதிகளாக  ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்ற உலக Football 4 Friendship சமூக நிகழ்வின் போது தெரிவாகியுள்ளனர்.

Gazprom மற்றும் FIFA வின் துணையுடனான F4F நிகழ்ச்சித் திட்டமானது இளைஞர் கால்பந்தாட்டத்தையும் ஆரோக்கியமான வாழ்வுமுறையையும் மேம்படுத்துவதையும், அகிம்சையை தூண்டுவதையும், திறந்த மனப்பாங்கை வளர்த்தலையும், வித்தியாசமான கலாச்சாரங்களையும் அந்நிய நாட்டவரையும் மதித்தலையும் உலகளாவிய சிறுவர்கள் மத்தியில் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினுாகவும் அயானும் ரஷ்யாவின் F4F சர்வதேச சிறுவர் மன்றத்திலும் கலந்து கொள்ளவுள்ளனர். அங்கு அவர்கள் தமது சகபாடிகளை சந்தித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதோடு, F4F இன் பிரதான இலக்குகளை உலகமெங்கும் சமூகமயப்படுத்தல் தொடர்பில் உதைபந்தாட்ட வீரர்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபடுவர்.

அயான் சதாத் கமபளையைச் சேர்ந்த அன்வர் சதாத் அவர்களின் புத்திரராவார்.

 

About the author

Web Writer

Leave a Comment