TECH உள்நாட்டு செய்திகள் கல்வி மாணவர் பகுதி

அரச பரீட்சைப் பெறுபேறுகளின் நம்பகத் தன்மையை ஒன்லைனில் உறுதிப்படுத்தும் வசதி

Written by Web Writer

அரச பரீட்சைப் பெறுபேறுகளின் நம்பகத் தன்மையை ஒன்லைனில் உறுதிப்படுத்தும் வசதி

அரச பரீட்சைகளின் பெறுபெறுகளை ஒன்லைன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வசதியினை பரீட்சைகள் திணைக்களம் தற்போது செய்துள்ளது. இதன் மூலம் தொழிலொன்றுக்கோ, உயர்கல்விக்கோ வேறும் தேவைகளுக்கோ விண்ணப்பதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் பரீட்சைப் பெறுபேறுகளை உடனுக்குடன் ஒன்லைனில் பரீசிலிக்க முடியுமாக இருக்கும்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆறு இலட்சத்துக்கும் அதிகமான பெறுபேற்றுச் சான்றிதழ்கள் வலயக் கல்வி நிலையங்களால் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசீலனைகளுக்கான பொறிமுறைகளினை வினைத்திறனானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் மாற்றுவதை நோக்காகக் கொண்டே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

About the author

Web Writer

Leave a Comment