இம்முறை வெசக் கொண்டாட்டங்களின் போது ஏற்பாடு செய்யப்படும் தன்சல் எனும் அன்னதான நிகழ்வுகள் யாவும் கண்டிப்பாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். தமது பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் விநியோகிக்கப்படும் விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதன் மூலம் இதனைப் பதிவு செய்து கொள்ள முடியும்.
பதிவு செய்யப்படாத அசுத்தமான உணவு, பானங்களை வழங்கும் தன்சலை உடன் நிறுத்துவதோடு அதனை செயல்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என பொது சுகாதார ஆய்வாளர் சங்கம் தெரிவிக்கின்றது.
மேலும், மனிதப் பாவனைக்கு தகுதியற்ற பல்வேறு வர்ணங்களிலான சீனி மற்றும் சுவையூட்டிளைப் பயன்படுத்தி பானங்களைத் தயாரித்து தன்சல் வழங்குவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உக்காத பிலாஸ்டிக் வகைகளை பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொது சுகாதார ஆய்வாளர் சங்கத் தலைவர் உபுல் ரோஹன அவர்கள் தெரிவித்தார்