உள்நாட்டு செய்திகள் தகவல் களம் பிராந்திய செய்திகள்

தகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை

Written by Web Writer

தகவலறியும் உரிமை (RTI) சட்டத்தின் பின் மக்களின் நிலை
இலங்கையில் தகவலறியும் உரிமை (RTI) சட்டம் அமுலுக்கு வந்து ஓராண்டு நிறைவாகியுள்ளது.

இது தொடர்பாக, சமூக சிற்பிகள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள, “RTI Law in Sri Lanka – The Dawn of a FISHBOWL REGIME” என்ற தலைப்பிலான  பொதுமக்களின் குரல்களை வெளிப்படுத்தும் ஆவணப்படுத்தலொன்று வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வு ஹட்டன் கல்வி அபிவிருத்திக்கான இலங்கை நிறுவக நிலையத்தில் (SIDA Centre for Education Development, Hatton), எதிர்வரும் 26ஆம் திகதி, காலை 10 மணிமுதல் 11.30 மணிவரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் கௌரவ விருந்தினராக, தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரான கிஷாலி பின்டோ ஜயவர்தன அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். விசேட விருந்தினர்களாக சட்டத்தரணி ஈ. தம்பையா, பிஜிக்கான வருகை நீதிபதி டொக்டர் ஜயந்தடி அல்மெய்டா குணரத்ன, தகவலறியும் உரிமை தொடர்பான பத்தியாளர் கிங்ஸ்லி கோமஸ் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். (V,S)

About the author

Web Writer

Leave a Comment