உள்நாட்டு செய்திகள் சமூகம் பெண்கள்

மதுபானத் தடைச்சட்டத்திற்கு எதிராக 21 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

Written by Web Writer

மதுபானத் தடைச்சட்டத்திற்கு எதிராக 21 பெண்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

மதுபானம் விற்பது, வாங்குவது மற்றும் மதுபானச் சாலைகளில் பெண்கள் பணிபுரியத் தடைவிதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பெண்கள் குழுவொன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.

பெண்களுக்கு மதுபானம் விற்றல், வாங்குதல் மற்றும் மதுபானச் சாலைகளில் பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து நிதியமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

முன்னதாக, சப்ரினா யூசுப் அலி, நிஷாந்தி பண்டார நாயக்க, எம்.டி.ஜே.பி பர்னாந்து, பிரபல நடிகை சமனலி பொன்சேகா, சந்திமா ரவினி ஜினதாஸ, தீபான்ஜலீ அபேவர்தன, சாரன்யா சேகரம், ரந்துலா த சில்வா மேனகா கல்கமுவ, சுஜாதா கமகே மற்றும் விசாகா பெரேரா திலகரத்ன ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் மேலும் 10 பெண்கள் தனித்தனியாக குறித்த தடைச்சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் இரண்டு பேர் முஸ்லிம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Web Writer

Leave a Comment