அரசியல் விளையாட்டு செய்திகள்

காஷ்மீரில் ரக்பி பெண்கள் அணிக்கு பயிற்சி கொடுத்த நாமல்!

Written by Administrator

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ரகர் விளையாட்டு அணியின் அழைப்பின் பேரில் மஹிந்தவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ரோஹித்த ராஜபக்ஷ ஆகியோர் ஜம்மு காஷ்மீர் ரகர் விளையாட்டு பெண்கள் அணியை சேர்ந்த 60 போட்டியாளர்களுக்கு நான்கு நாட்கள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிக்காக ஆறு பயிற்சியாளர்கள் இவர்களுடன் இணைந்து இலங்கையில் இருந்து பயணித்தனர்.

காஷ்மீர் பகுதியில் மக்கள் கடும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்தியா-பாகிஸ்தான் முறுகலின் விளை நிலமாக அது பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சியின் இடையில், காஷ்மீர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபுக்களுடன் நாமல் ராஜபக்ஷ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.About the author

Administrator

1 Comment

Leave a Comment