Scholarship உள்நாட்டு செய்திகள் கல்வி

ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.

Written by Web Writer

ஆலிம்களுக்கு சிங்கள மொழியில் விசேட கற்கைநெறி ஆரம்பம்.

சிங்கள மொழிப் புலமையுள்ள ஆலிம்களை நவீன கல்வித்தரத்தில் வலுப்படுத்தும் நோக்குடன் புதிய ஒரு கற்கைநெறி ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய சிங்கள மொழியில் நவீன பாடத்திட்டம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்கலை, எழுத்தாற்றல், ஆயுர்வேதம், தலைமைத்துவப் பயிற்சி, இலங்கை விவசாய முறைகள், நவீன தொடர்பாடல் பயிற்சி, இலங்கை சட்டங்கள், நேர முகாமை, திறன் விருத்தி, நவீன ஊடகப் பாவனை போன்ற பல்வேறு துறைசார் விடயங்கள் இந்த கற்கைநெறியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஒரு வருட கற்கைநெறியில் முதல் 8 மாதம் கற்கை காலமாகவும் ஏனைய மாதங்கள் கள செயற்பாடுகளாகவும் அமையவுள்ளன.

ஸம் ஸம் பவுண்டேஷனும் பத்ஹ் எகடமியும் இணைந்து இக் கற்கை நெறியை நடத்துகின்றன. இக் கற்கைநெறியில் ஆர்வமுள்ள ஆலிம்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 2018.05.20 ஆகும். 077 041 8888 என்ற இந்த தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

About the author

Web Writer

1 Comment

  • தமிழையே கொச்சையாக பேசுவது நாகரிகம் என்று நினைக்கும் ஆலிம் , — சிங்களம் என்ன பாடு படப்போகிறதோ

Leave a Comment