உலக செய்திகள் சர்வதேசம்

5259 குஜராத் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனுத் தாக்கல்.

Written by Web Writer

5259 குஜராத் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனுத் தாக்கல்.

குஜராத் மாநிலத்தில், விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியதால், பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர், தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி கோரி, விண்ணப்பித்துள்ளனர்.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்கு, பாவ்நகர் மாவட்டத்தில், அனல் மின் நிலையம் அமைப்பதற்காக, 12 கிராமங்களை சேர்ந்த, 1,250 விவசாயிகளின், விவசாய நிலங்களை, மாநில அரசு கையகப்படுத்தியது.

இது குறித்து, குஜராத் விவசாயிகள் சங்க உறுப்பினர், நரேந்திர சிங் கோஹில் கூறியதாவது: விவசாய நிலங்களை, அரசு கையகப்படுத்தியதால் பாதிக்கப்பட்ட, 12 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என, 5,259 பேர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். அதற்கு, அரசின் அனுமதி கோரி, அனைவரும் கையெழுத்திட்ட மனு, ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர் மற்றும் கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மோடியும் பா.ஜா.காவும் இருக்கும் வரை பொதுமக்களுக்கு நெருக்கடி நிலை இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு தெளிவான ஆதாரம் இந்த சம்பவம். குஜ்ராத் தேர்தலின் பின்னர் தொடர்ந்து மோடியினதும் அவரது கட்சியினதும் சுயரூபத்தைக் காட்டும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

2019 இல் அதாவது, அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் மோடிக்கு தக்க பதில் கிடைக்கலாம் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்

About the author

Web Writer

Leave a Comment