ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் சமூகம்

முதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.

Written by Web Writer

முதுராஜவலையில் குப்பை கொட்டுவதற்கு மாதாந்தம் 10 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது.

கொழும்பு நகரில் நாளாந்தம் 700 மெட்ரிக் தொன் குப்பை சேருகின்றது. இதனை முதுராஜவல பகுதியில் கொண்டுசேர்ப்பதற்கு காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் சுமார் 10 கோடி ரூபாய் செலுத்துவதாக கொழும்பு நகர சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து கொழும்பு நகரக் குப்பைகளை வெளியேற்ற பொருத்தமான இடம் கிடைக்காமை காரணமாக புதிய மாற்று செயற்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப் படுவதாகவும் அறியக் கிடைக்கிறது.

நாளாந்தம் நகரில் இருந்து வெளியேற்றப்படும் வேறுபிரிக்கப்பட்ட ஒரு தொன் குப்பைக்கு 3000 ரூபாயும் வேறுபிரிக்கப்படாத ஒரு தொன் குப்பைக்கு 5000 ரூபாயு‌ம் அறவிடுவதாகவும் மேலும் அச்செய்தி குறிப்பிடுகிறது.

குப்பைகளை நகரில் இருந்து முதுராஜவல குப்பை மீள்சுழற்சி மையத்திற்கு  நகர சபை லொரிகள் மற்றும் தனியார் துறை இரு நிறுவனங்களின் லொரிகளும் நாளாந்தம் கொண்டு செல்வதாக அங்குள்ள பொறியியல் பிரிவு தெரிவிக்கிறது.

About the author

Web Writer

Leave a Comment