இலங்கையில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் குறைந்தது 7 பேர் பலியாகியுள்ளனர்.
பலத்த மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணிகளில், முப்படையினரை ஈடுபடுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டின் பல பிரதேசங்கள் வாழ்வாதார நெருக்கடியிலும், சுத்தமான குடிநீர், உணவு என்பவற்றை பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றது.
Water level increasing; People near Nilvala, GinGanga, Kalu, Kelani, Mahaweli, Attanagalu Oya and MaOya rivers were advised to be alert#lka
— MEELPARVAI NEWSPAPER (@Meelparvai) May 21, 2018
”ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், மண்சரிவு குறித்த எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது. இயற்கை அனர்த்தங்களினால் இதுவரை 86,000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 2000 இற்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. குறிப்பாக, புனித ரமழான் நோன்பு காலப்பகுதி என்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.