பிராந்திய செய்திகள்

இலங்கை பல்கலைக்கழக நண்பர்கள் கத்தார் இப்தாரில் சந்திப்பு

Written by Administrator

 – ரிம்சான் ரபீக் –

கடந்த செவ்வாய்க்கிழமை (29) அன்று  கட்டாரில் இருக்கின்ற ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக (Alumni of University of Sri Jayewardenepura) பழைய மாணவர்களால் இப்தார் நிகழ்வு ஒன்று கத்தார் Lakbima உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏறத்தாழ 80 பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றமையானது பழைய பல்கலைக்கழக நினைவுகளை ஞாபகப்படுத்தியதோடு அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்தது. மேலும் இவ்வாறான நிகழ்வுகளை வருடாவருடம் நாடாத்தி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இந்த ஒன்றுகூடலில் முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறான ஒன்றுகூடல்கள் பல செயற்றிட்டங்களுக்கான சாத்தியப்பாடுகளை துரிதப் படுத்துவதுடன் நண்பர்களுடன் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தவும் வழிசமைக்கின்றன.

Image may contain: 6 people, people sitting and indoor

Image may contain: 9 people, including Rasa Rafi, people smiling, people sitting, crowd and indoor

Image may contain: 9 people, including Naleem Hassim and Abu Nyla Munaf Muzammil, people smiling, people standing, stripes and indoor

Image may contain: text

About the author

Administrator

Leave a Comment