ஆரோக்கியம் உள்நாட்டு செய்திகள் சமூகம்

உலக புகைத்தல் எதிர்ப்பு தினம்

Written by Web Writer

இன்று உலக புகைத்தல் எதிர்ப்பு தினமாகும். இம்முறை ‘புகையிலை மற்றும் இதயநோய்’ என்ற தொனிப்பொருளில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
புகையிலைப் பாவனையால் ஏற்படும் மரணங்கள் மற்றும் நோய்களைக் கருத்திற் கொண்டு மக்கள் புகையிலை மற்றும் புகையிலை சார் உற்பத்திப் பொருட்களை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை வைத்திய சங்கம் கோரியுள்ளது.
புகையிலைப் பாவனை காரணமாக உலகம் பூராகவும் மில்லியன் கணக்கான மக்கள் மரணிக்கின்றனர். புகையிலைப் பாவனையில் இருந்து மக்களை பாதுகாக்க பாரிய திட்டம் ஒன்றுக்கான தேவை தற்போது வெகுவாக உணரப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான அதிகார சபைத் தலைவர் வைத்தியர் பாலித அபயகோன் அவர்கள் தெரிவித்தார்.

About the author

Web Writer

Leave a Comment