பலஸ்தீன

ரஸானை இஸ்ரேல் திட்டமிட்டே கொன்றது

Written by Administrator

இஸ்ரேலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, இஸ்ரேலியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்து வந்த இளம் தாதியான ரஸானை இஸ்ரேல் திட்டமிட்டே படுகொலை செய்துள்ளது என்று பலஸ்தீன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காஸாவில் இடம்பெற்று வரும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் மீள்குடியேற்ற உரிமைக்கான அமைதிப் பேரணிகள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தொடர்ந்தும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 30 இல் ஆரம்பிக்கப்பட்ட அமைதிப் பேரணிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் தாறுமாறாகச் சுட்டதில் இதுவரை 125 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

21 வயதான ரஸான் அல் நஜ்ஜார் கடந்த வாரம் தெற்கு காஸாவிலுள்ள கான் யூனிஸின் கிழக்குப் பகுதியில் வைத்து இஸ்ரேலிய இராணுவத்தின் சத்தமில்லா துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைப் படுகொலை செய்த இஸ்ரேல் வேண்டுமென்றே சுடப்பட்டதல்ல என்றும் இது குறித்த விசாரணைகளைத் தொடங்குவதற்குத் தயாராகவுள்ளதாகவும் என சர்வதேச சமூகத்தின் காதில் பூச் செருக முயல்கின்றது.

தாதிக்குரிய வெள்ளை ஆடை அணிந்திருந்த ரஸான், கையை உயர்த்தி தெளிவாகவே தான் ஒரு தாதி என்று அறிவித்தும் இஸ்ரேலிய இராணுவம் அவரைச் சுட்டுக் கொன்றது. இது போன்று நூற்றுக்கணக்கான காஸா மக்களை இஸ்ரேல் சுட்டுக் கொன்றுள்ளது.

Image result for razan al najjar
Image result for razan al najjar mother

About the author

Administrator

Leave a Comment