ஆரோக்கியம்

வளர்ந்தோரில் 25 வீதத்தினருக்கு தொப்பை

Written by Administrator

இலங்கையின் சனத்தொகையில் வளர்ந்தோரில் 25 வீதமானோர் தொப்பை விழுந்தவர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் போசனை விஷேட வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனைக் குறைப்பதற்கு நாளொன்றுக்கு 10,000 எட்டுக்கள் நடக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தேசிய போசனை மாதத்தினை முன்னிட்டு ”தொப்பையைக் குறைப்பதற்கான வழி” எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் தொப்பை விழுந்தவர்களாவர். இலங்கையின் சனத்தொகையில் மேலதிக நிறை உள்ளவர்களை விட மேலதிக வயிறு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம் என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது பாரியதொரு சுகாதாரப் பிரச்சினையாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகமான எண்ணெய் வயிற்றில் தேங்குவதனாலேயே வயிறு உப்பிவிடுகிறது. இவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

About the author

Administrator

Leave a Comment