சமூகம் பெண்கள்

50 நாடுகளுடன் போட்டியிட்டு செஸ் செம்பியனாகிய சைனப் சௌமி

Written by Administrator

– அனஸ் அப்பாஸ் –

இரசாயனஆய்வுகூடபரிசோதகர்களான (MLT)சௌமி பாருக் – ஷாமிலா முஸ்தால் தம்பதிகளின் ஒரே செல்வப் புதல்வியான சைனப் சௌமி கண்டி அம்பதென்னையில் வசித்து வருகின்றார். கண்டிஉயர்கல்லூரியில் (Kandy High School) உயர்தர உயிரியல் பிரிவில் கற்றுவரும் இவர், இத்தாலி நாட்டின் ஸ்பொலேடோ நகரில் இடம்பெற்ற2017 ஆம் ஆண்டின் சர்வதேச அமெச்சூர் சதுரங்க (செஸ்) போட்டியில் (FIDE World Amateur Chess Championship) – 2017) சர்வதேச செஸ் தரப்படுத்தலில் 1700-2000 புள்ளிகளுக்கான பெண்கள் பிரிவில் 50 நாடுகளைச் சேர்ந்த 200 போட்டியாளர்களில் முதலிடம் வென்று சர்வதேச சம்பியன் கிண்ணத்தை வென்றார். தனது17 வயதில் இச் சாதனையை மேற்கொண்ட சைனப்,சர்வதேச அங்கீகாத்துடன் தேசிய முதல்நிலை தரத்திலும் பேசப்படுவதுடன், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு10 வருடங்களின் பின்னர்இப்பெருமையை ஈட்டியும் கொடுத்துள்ளார்.

தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்றதுடன், க.பொ.த. சாதாரண தர பரீட்சையில்8A, 1B உயர் சித்திகளைப் பெற்ற சைனப் இதுவரை நிகழ்த்தியுள்ள சாதனைப் பட்டியல் இதோ,

பாடசாலை மட்டம்

 • 2008: இஸ்லாமிய தின பேச்சுப் போட்டியில் முதலிடம்
 • 2009: இஸ்லாமிய தின பேச்சுப் போட்டி முதலிடம், கிராஅத் போட்டி இரண்டாமிடம்
 • 2010: இஸ்லாமிய தின பேச்சுப் போட்டி முதலிடம், கிராஅத் போட்டி மூன்றாமிடம், பாடசாலை இல்ல விளையாட்டு 4*100 Primary Relay மூன்றாமிடம்
 • 2011, 2012, 2013, 2014, 2015, 2016: இஸ்லாமிய தினகிராஅத் போட்டி முதலிடம்
 • 2011, 2012, 2013, 2015: குழு கஸீதா மூன்றாமிடம்
 • 2011: தமிழ் இலக்கிய ஒன்றிய பேச்சுப் போட்டி முதலிடம்
 • 2014: தமிழ் இலக்கிய ஒன்றிய பேச்சுப் போட்டி மூன்றாமிடம்

வலய மட்டம்

 • 2011, 2012, 2014, 2015: இஸ்லாமிய தினகிராஅத் போட்டி, முதலிடம்
 • 2013: இஸ்லாமிய தின ஹிப்ழுல் குர்ஆன் போட்டி, இரண்டாமிடம்

மாகாண மட்டம்

 • 2013: Inter School Team Chess Championship, 15 வயதிற்குக் கீழ்– Champion and best on board 3
 • 2014: National Schools Team Chess CHampionship, 15 வயதிற்குக் கீழ்– 1st Runners Up
 • 2015: National Schools Team Chess CHampionship, 19 வயதிற்குக் கீழ்– 1st Runners Up, best on board 4.

Sri Lanka Women Nationals Qualifier Chess Championship – 2nd Runners Up

தேசியமட்டம்

 • 2012: Sri Lanka Schools Individual Chess Championship, 12 வயதிற்குக் கீழ்– 1st Runners Up
 • 2013: Sri Lanka Schools Individual Chess Championship,13 வயதிற்குக் கீழ் – Merit
  • Sri Lanka Schools Individual Chess Championship (Selection Tournament for Asian Games),13 வயதிற்குக் கீழ் – Merit
  • Sri Lanka National Youth Rapid Chess Championship – Champion
 • 2014: National Schools Team Chess Championship, 15 வயதிற்குக் கீழ்–2nd Runners Up, best on board 4.
  • National Youth Blitz Chess Championship, , 14 வயதிற்குக் கீழ்– 1st Runners Up
  • Sri Lanka National Youth Rapid Chess Championship, 14 வயதிற்குக் கீழ்– 1st Runners Up
 • 2015: National Schools Team Chess Championship, 19 வயதிற்குக் கீழ்–Champion, best on board
  • Inter School Team Chess Championship, 17 வயதிற்குக் கீழ் – best on board
  • Sri Lanka Schools Individual Chess Championship, 15 வயதிற்குக் கீழ் – Merit
  • National Youth Blitz Chess Championship, , 16 வயதிற்குக் கீழ்–2nd Runners Up
 • 2016: Sri Lanka Schools Individual Chess Championship,17 வயதிற்குக் கீழ் – Merit
  • Sri Lanka Women National B Chess Championship, 2nd Runners Up
  • National Youth Chess Championship, 16 வயதிற்குக் கீழ் – Champion
  • Sri Lanka Women National Chess Championship – Champion

சர்வதேச மட்டம்

 • 2009: Asian Schools Chess Championship – இலங்கைப் பிரதிநிதி
 • 2013: Asian Schools Chess Championship – இலங்கைப் பிரதிநிதி

13 வயதிற்குக் கீழ்– Blitz – 1st Runners up, Classical – 3rd Runners up

 • 2016: Asian Schools Chess Championship (மொங்கோலியா)– இலங்கைப் பிரதிநிதி

16 வயதிற்குக் கீழ்– Blitz – 8th Runners up, Classical – 6th Runners up

 • World Youth Chess Championship (ரஷ்யா) – இலங்கைப் பிரதிநிதி
 • World Olympiad Chess Championship (அஸர்பைஜான்) – இலங்கைக் குழு உறுப்பினர்
 • 2017: Asian Zonals 3.2 Chess Championship (நேபாளம்) – இலங்கைப் பிரதிநிதி

பெண்கள்: 5th Runners Up

 • World Amateur Chess Championship (இத்தாலி) – இலங்கைப் பிரதிநிதி

பெண்கள்: சர்வதேச தரம் Under 2000 Category – Champion

 • World School Chess Championship (ரோமேனியா) – இலங்கைப் பிரதிநிதி

17 வயதிற்குக் கீழ்– Blitz –2ndRunners Up

 • Asian Indoor Games (டர்க்மேனிஸ்தான்) – இலங்கைப் பிரதிநிதி

இது தவிரவும் பாடசாலை செஸ் Captain ஆக  திகழ்ந்த சைனப் 2011 முதல்2017 வரை பாடசாலை இல்லவிளையாட்டுப் போட்டிகளில் தொடராக செஸ் விளையாடியதுடன் இன்னும் பல விளையாட்டுக்களிலும் தனது திறனை வெளிப்படுத்தி உள்ளார்.

தற்போது உயர்தரம் கற்றுவரும் இவர் கல்வி நடவடிக்கைகள் காரணமாக முழுமையாக செஸ் விளையாட்டில் ஈடுபடுவதில்லை. ஆயினும், இம்முறை (2018 இல்) அகில இலங்கை பாடசாலை ரீதியில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடமும், அகில இலங்கை யூத் செஸ்விளையாட்டில் இரண்டாமிடமும் பெற்றுள்ளார். இதன்மூலம் ஆசிய மட்டத்தில் தாய்லாந்தில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்ற வாய்ப்புக் கிடைத்தும் பங்கேற்கவில்லை. மேலும் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ள உலகளாவியசெஸ் போட்டியிலும் க.பொ.த. உயர்தரபரீட்சை காரணமாக பங்குபற்றாமல் இருக்க இவர் முடிவு செய்துள்ளார்.

“செஸ் விளையாட்டில் ஈடுபட்டால் பகுப்பாய்வு சக்தி அதிகரிக்கின்றது. சவால்களுக்கு முகம்கொடுக்க முடிவதுடன் தனி முடிவு எடுக்கும் திறன், சுய விருப்பத் தேர்வு ஆற்றல், முகாமைத்துவ ஆற்றல், ஞாபக சக்தி, நற்பண்புகள், சுய கட்டுப்பாடு, நெறிப்படுத்தல் திறன், வித்தியாச கோணங்களில் சிந்திக்கும் ஆற்றல், நேர முகாமைத்துவப் பண்பு என்பன அதிகரிக்கின்றன.” எங்கின்றார் சைனப்.

செஸ் விளையாட்டில் இத்தனை சாதனைகளை நிகழ்த்த சைனப் இற்கு வழிகாட்டியவர் யார்? 6 வயதுமுதலே இவ்விளையாட்டை பரீட்சயமாக்கி, வழிகாட்டியது அவரது சித்தி ரிஸ்லா ரஹ்மத்துல்லாஹ். மாவட்ட ரீதியில் ஆரம்பத்தில் அங்கீகாரம் கிடைத்தபொழுதும், துவளாது பயணித்து சர்வதேச சாதனையை நிகழ்த்த வழிகாட்டிய அவரது பெற்றோர், சித்தி ரிஸ்லா, பாடசாலை பயிற்றுவிப்பாளர் ப்ரியங்கிகா ரணசிங்ஹ, பிரத்தியேக பயிற்றுவிப்பாளர் ராஜீந்தர கலுகம்பிட்டிய, ஆசிரியர்களான இந்து நாகொல்ல, அனுராத கொஸ்வத்த மற்றும் அதிபர், நண்பர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் உண்மையில் நன்றிக்குரியவர்கள்.

செஸ் விளையாட்டில்போன்றே ஏக காலத்தில் தனது கல்வித் துறையிலும் அதிவிஷேட திறன்களை வெளிப்படுத்தும் சைனப் எதிர்காலத்தில் அவரது விருப்பம்போன்றே உயிரியற் துறையில் சிறந்த இடத்தையும், செஸ் விளையாட்டின் அதி உயர் பதவியாகிய Women Grand Master பட்டத்தையும் பெற வாழ்த்துக்கள்.

About the author

Administrator

Leave a Comment