நாடுவது நலம்

அதிகாரத்தின் மீது மோகம் வைக்காத கொள்கைவாதி டட்லி சேனாநாயக்க

Written by Administrator

ஜூன் 19ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாக்க அவர்களது சிரார்த்த தினத்தையொட்டி இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களால் எழுதப்பட்ட விஷேட கட்டுரை

டட்லி சேனாநாயக்க அவர்கள் கூட்டங்களில் உரை நிகழ்த்தியதை நான் கண்டுள்ள போதும் அவரை நான் நேரில் சந்தித்தது 1970 ல் ஆகும். எழுபதாம் ஆண்டின் தேர்தல் தோல்வியின் சூடு தணிந்திராத இக் காலகட்டத்தில் கட்சி அடைந்த தோல்வி தொடர்பாக அவர் மிகவும் குழம்பிப் போயிருந்தார்.
எனது தகப்பனாரின் கடிதத்துடன் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் மாணவர்களைப் பரிதிநிதித்துவப்படுத்திய குழுவினராக நாம் அவரைச் சந்தித்தோம். அப்போதைய ஐ.தே.க. இளைஞர் முன்னணியின் செயலாளராக இருந்த ஜினதாச நியத்தபால அவர்கள் இச் சந்திப்பிற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தார். எமக்கு அவர் பதிலளித்த விதம் தற்போது எனது ஞாபகத்திற்கு வருகிறது.

‘பிள்ளைகளே! நீங்கள் தற்போது நன்றாகப் படியுங்கள். இது படிக்கின்ற வயது. பல்கலைக்கழகத்திற்குச் சென்று திரும்பி வந்ததன் பின்னர் அரசியல் செய்ய முடியும். அப்போது நாம் உங்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவோம்.’

தனது அரசியல் நோக்கங்களுக்காக மாணவர்களைக் பகடைக்காயாகப் பயன்படுத்த விரும்பாத ஒரு நேர்மையான தலைவரின் பிரதிவிம்பத்தை அன்று நாம் கண்டோம். இளைஞர்களாக இருந்த எமது அரசியல் தாகத்தைத் தணிப்பதற்கு அவரது பதில் போதுமானதாக இருக்கவில்லை.
‘ஐ.தே.கட்சி இந்த நிலைப்பாட்டை எடுக்குமாயின் எதிர்கால சந்ததியினர் தீவிரவாதப் பாதையில் செல்வதைத் தடுக்க இயலாது போகும்.’

எமது கருத்தை மிகவும் ஆணித்தரமான முறையில் நாம் அவரிடத்தில் தெளிவுபடுத்தினோம். மாணவர் பிரதிநிதிகள் முன்வைத்த விரிவான மற்றும் வன்மையான விடய விளக்கத்தினைத் தொடர்ந்து நிலவுகின்ற உண்மையான நிலவரத்தின் பாரதூரத் தன்மையினை அவர் புரிந்துகொண்டார் என்பதாகத் தெரிந்தது.

‘அப்படியாயின் நாம் சிந்தித்து ஒரு முடிவுக்கு வருவோம். எனக்கு ஒரு வாரம் அவகாசம் தாருங்கள்’
இறுதியாக டட்லி சேனாநாயக்க அவர்கள் எம்மிடம் கூறினார். ஆனந்தாக் கல்லூரியின் மாணவர் குழுவிற்கு ஒரு வாரத்தில் அழைப்பு வந்தது. அது வுட்லண்ட் இல்லத்திலிருந்து ஆகும். நாம் மிகவும் மகிழ்ச்சியாக அங்கு சென்றோம். ஜினதாச நியத்தபால, பேராசியரியர் திலக் ரத்னகார, ஜே.ஆர்.பி.சூரியப்பெரும, கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு ஆகியோர் அங்கு காணப்பட்டார்கள்.

‘கட்சியின் மாணவர் அமைப்பினை ஆரம்பிப்பதற்கு நாம் எண்ணவில்லை. நீங்கள் ஆரம்பித்துள்ள ஜனநாயக மாணவர் சங்கத்தை அப்படியே தொடருங்கள். கட்சி என்ற ரீதியில் உங்களுக்கு ஜனநாயக சிந்தனை தொடர்பாக மாணவர்களை அறிவூட்டுவதற்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டல்களையும் இவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்.’

வருகை தந்திருந்து நால்வரும் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள். பின்னர் சமவாத மாணவர் முன்னணியாக மாற்றம் பெற்ற ஐ.தே.கட்சியின் மாணவர் பிரிவின் தோற்றத்திற்கு அவ்வாறு தான் வித்திடப்பட்டது. இவ்வாறு தான் இந்த நாட்டு அரசியலின் ‘சௌமிய அடையாளம்’ என அழைக்கப்படக் கூடிய டட்லி சேனாநாயக்கா அவர்களுடன் தொடர்புபடுவதற்கு எனக்கு அவகாசம் கிடைத்தது.

பொதுமக்கள் வாழ்வில் அவரது நடத்தையானது இலங்கை அரசியலில் ‘ஒரு ஜனநாயகவாதியின் முன்மாதிரி’ என அழைப்பது பொருத்தமானதாகும் என நான் நம்புகிறேன். மனித நேயம் படைத்த டட்லி சேனாநாயக்க அவர்கள் அரசியலை அழகுபடுத்திய, அதற்குப் பெறுமதி சேர்த்த ஒரு மாமனிதர் ஆவார்.

அரசியல் அதிகாரம் மற்றும் காசு பணத்திற்கு முன்னால் மனித உயிர்களை மதிக்காத ஒரு யுகத்தில் டட்லி சேனாநயக்க அவர்களின் நடத்தையிலிருந்து ஏராளமான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முடியும். 60 ம் தசாப்தத்தில் இடம்பெற்ற ஹர்தாலின் போது நிகழ்ந்த ஓர் உயிர்ச் சேதம் காரணமாக அதிர்ச்சியிலும் கவலையிலும் தோய்ந்து போன டட்லி அவர்கள், பிரதமர் பதவிக்கு விடை கொடுத்து அதிகாரத்தில் தொடர்ந்தும் இருப்பதற்கான பேராசை தன்னிடம் இல்லை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்தி விட்டு வுட்லண்ட் இல்லத்தைச் (தனது பிரத்தியேக இல்லம்) சென்றடைந்தார். நாட்டின் தலைவன் என்ற ரீதியில் தனது நாட்டு மக்களின் உயிர்களுக்கு வகைகூறுவதற்கான தனது பொறுப்பினை அவர் இதன் மூலம் எடுத்துக் காட்டினார்.

‘அரசியலும் ஒருவகையான யுத்தம் ஆகும். சிலபோது விஷவாயுவை பயன்படுத்த நேரிடலாம்’
ஒருமுறை வின்சண்ட் சேச்சில் குறிப்பிட்டதைப் போன்று செய்யத் தலைப்படாத ஒரு அரசியல்வாதியே டட்லி ஆவார்.

சொல்வதை விட நடத்தை மூலம் அவரிடம் பௌத்த மதத்தைக் காண முடிந்தது. அரசியல் நோக்கங்களுக்காக மதம், நாடு, சாதி அல்லது வகுப்பு ஆகியவற்றை ஒரு வியாபாரப் பொருளாகக் கருதி குரோதத்தை விதைக்கும் செயற்பாட்டில் அவர் ஒருபோதும் ஈடுபடவில்லை. பல்வேறு இனங்கள் வாழும் ஒரு சமூகத்தில் அவ் அனைத்து இனங்களினதும் அன்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மனப்பூர்வமாக வென்ற ஒரு தலைவரைக் காண்பது மிகவும் அபூர்வமாகும். டட்லி சேனாநயாக்க அவர்கள் உண்மையிலேயே அவ்வாறான ஒரு தலைவர் ஆவார். எமது வாழ்நாளில் நாம் கண்ட அமெரிக்காவின் ஜோன் கெனடி, கனடாவின் பியரே ட்ரூடோ, இலங்கையின் டட்லி சேனாநாக்க ஆகியோர் அவ்வாறானவர்கள் என்பது எனது நம்பிக்கை ஆகும்.

1956 தேர்தல் நெருங்கியிருந்த வேளையில் ஜோன் கொத்தலாவல அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அன்று காணப்பட்ட போக்கினை அனுசரித்து ‘சிங்களம் மட்டும்’ எனும் கொள்கையைத் தழுவியதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்குச் சார்பான வடக்கின் மக்கள் நீரோட்டம் சரியவாரம்பித்தது. பெடரல் கட்சித் தலைவர் செல்வநாயத்தைத் தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற நடேசன் அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட தமிழ் தலைவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் ‘சிங்களம் மட்டும்’ எனும் கொள்கையை ஆதரித்ததனைத் தொடர்ந்து தமக்கு இனிமேலும் கட்சியில் இருக்க முடியாதென கண்களில் கண்ணீர் மழ்க மத்திய செயற்குழுவிற்குத் தெரிவித்து விட்டு முழுமனதுடன் ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் செல்லவில்லை என்பது நடேசன் அவர்களின் உரையைப் படித்துப் பார்க்கின்ற போது தெளிவாகிறது.

கொள்கை ரீதியான நிலைப்பாட்டில் நிகழ்ந்த இம் மாற்றம் காரணமாக வடக்கு மக்கள் மத்தியில் அனைத்து இனங்களுக்கும் பொதுவான ‘தேசிய கட்சி’ யாக அதுவரை ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்த பிரதிவிம்பம் சரிய ஆரம்பித்தது. பிற்பட்ட காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் பொறுப்பேற்ற டட்லி சேனாநாயக்க அவர்கள், வரலாற்றில் இடம்பெற்ற தவறை நிவர்த்தி செய்து செல்வநாயகம் மற்றும் திருச்செல்வம் போன்ற தலைவர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்பி தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான சட்டங்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்த போதும் தீவிரவாத சக்திகளின் செயற்பாடு காரணமாக அவற்றை அங்கீகரிக்க முடியாது போனதன் காரணமாக தேசிய ஒற்றுமைக்காக கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சந்தர்ப்பம் கைநழுவிப் போயிற்று.

ஐக்கிய தேசிய கட்சிக்கும் அப்போதிருந்த பிரதான இடதுசாரிக் கட்சிகளுக்கும் இந்த நாட்டின் அனைத்து இனங்களுக்கும் பொதுவான ஒரு தேசிய கட்சியாக பணியாற்றுவதற்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் கைநழுவிச் செயல்வதற்கு இடமளிக்கப்பட்டதன் மூலம் இனவாதக் கட்சிகள் வலுவடைதல் மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு விளைவிக்கப்பட்ட சேதம் ஆகியன நாம் வரலாற்றில் காணுகின்ற ஒரு துரதிஷ்டவசமான நிலைமை ஆகும். இதன் மூலம் நாம் இன்றும் கூட படிப்பினை பெற வேண்டியுள்ளோம்.

1996 ல் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதற்காக தயார் செய்யப்பட்ட மாவட்ட சபை மற்றும் தமிழ் மொழி மூலம் அப் பிரதேசங்களில் அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான சட்டத்தை அங்கீகரிப்பதற்காக டட்லி சேனாநாக்க அரசாங்கம் திறமை பெறாததன் காரணமாக தமிழ் தலைவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்றார்கள். இக் காலகட்டத்தில் பாராளுமன்ற கூட்டங்களை அறிக்கையிட்ட ஓர் ஆங்கில செய்திப் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் என்னிடம் கூறிய ஒரு விடயம் எனது ஞாபகத்திற்கு வருகிறது. அரசாங்கத்திலிருந்து விலகிய தமிழ் தலைவர் ஒருவரான அமிர்தலிங்கம் அவர்களைச் சந்தித்த ஊடகவியலாளர், தமிழ் தலைவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதால் அரசாங்கம் பதவி துறக்க நேரிடுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக கூறியுள்ளார்.

‘டட்லி அவர்கள் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் உள்ள ஓர் அபூர்வமான தலைவர் ஆவார். தீவிரவாத சக்கிகளின் செயற்பாட்டின் முன்னால் தமிழ் மக்களுக்கான நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக அவருக்கு முடியாமல் போனாலும் கூட அவர் போன்று பரந்த மனம் படைத்த சிங்கள அரசியல்வாதிகளைப் பாதுகாப்பது இந்த நாட்டின் எதிர்காலத்திற்காக நாம் செய்ய வேண்டிய ஒரு பணி ஆகும். ஆகவே நாம் அரசாங்கத்திலிருந்து நீங்கினாலும் கூட டட்லியின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நாம் துணை போக மாட்டோம்’

அன்று ‘டட்லியின் வயிற்றில் மசாலா வடை’ போன்ற கோசங்களை ஒலிக்கச் செய்து கோபமூட்டுவதன் மூலமாக மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு தலைமை தாங்கிய சக்திகள் மாவட்ட அலகுகள் உருவாக்கப்படுவதே இன்று இப் பிரச்சினைக்கான தீர்வு எனக் கூறிக்கொண்டு அன்று டட்லி எடுத்த நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமையினை நாம் ‘விதி செய்த விளையாட்டு’ என்றே அழைக்க வேண்டியுள்ளது.

‘அரசியல்வாதி, அடுத்து இடம்பெறவுள்ள தேர்தலையே நோக்கமாகக் கொண்டிருப்பார். இராஜதந்திரி, அடுத்து வரவுள்ள தலைமுறையினரை நோக்கமாகக் கொண்டிருப்பார்’ டட்லி சேனாநாயக்க என்பவர் மேற்குறித்த கூற்றிற்கு அர்த்தம் கற்பித்த ஒரு தலைவர் ஆவார். அவர் எப்பொழுதும் அடுத்த தலைமுறையினரை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டார்.

டட்லி சேனாநாயக்க அவர்கள் அரசுக் கழக உறுப்பினர் ஒருவராக இருந்த போது தனது தகப்பனார் சமர்ப்பித்த பிரேரணைக்கு எதிராக பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்துத் தெரிவித்த விதம் அரசுக் கழகக் கூட்ட அறிக்கைகளை வாசிக்கின்ற போது புலப்படுகிறது. தகப்பனார் மீதுள்ள மதிப்பு மற்றும் தனது மனச்சாட்சி ஆகியவற்றுக்கிடையே சிக்கித் தவித்த டட்லி அவர்கள், ஒருமுறை தனது தகப்பனாருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

‘அன்புத் தந்தை அவர்களே’
‘நாம் இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழ்கின்றோம். உங்களது மகன் என்ற ரீதியில் இவ்வாறு செயற்படுவதற்கு நேர்ந்துள்ளமை மனவேதனையைத் தருகிறது. அமைச்சரவை சார்பாக நீங்கள் அரசக் கழகத்திற்குச் சபைக்குச் சமர்ப்பிக்கும் ஒருசில யோசனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. பல சந்தர்ப்பங்களில் உங்களை எதிர்க்க நேர்ந்தது. அவ்வாறான ஒரு சம்பவம் இன்றைய தினத்திலும் நிகழ்ந்தது. இதனூடாக நான் பலத்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளேன். ஆகவே அரசுக் கழகத்திலிருந்து இராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளேன்.’

தனது அன்புக்குரிய மகனின் கடிதத்திற்கு டீ.எஸ்.சேனாநாயக்க அவர்கள் இவ்வாறு பதில் எழுதியிருந்தார்.

‘நீங்கள் எனது மகன் ஆன போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்னை எதிர்ப்பதற்கு உங்களுக்கு பூரண சுதந்திரம் உள்ளது. நான் உங்களைப் பேணி வளர்த்ததும் கல்வியறிவூட்டியதும் உங்களை சுயாதீனமான ஒரு நபராக உருவாக்குவதற்கு ஆகும். மனச்சாட்சிக்கு அமைவாக செயற்படும் ஒருவராவதற்கு ஆகும். நீங்கள் அரசுக் கழகத்தில் தைரியமாகவும் சரியாகவும் உங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான பலத்தினைக் கெண்டிருப்பது பற்றி நான் பெருமையடைகின்றேன். அது ஒருபோதும் நமது தந்தை பிள்ளை உறவிற்கு பாதகமாக அமையாது.’

இந்த தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையே நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றமானது இன்றைய காலகட்டத்தில் அரசியலுக்கு போன்றே இருக்க வேண்டிய ஜனநாயக ரீதியிலான நடத்தைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி என்பது புலப்படுகிறது.

தனது அன்புத் தந்தையின் மறைவு காரணமாக வெற்றிடமான பிரதமர் பதவிக்கு டட்லி சேனாநாயக்க அவர்கள் தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் மக்களது ஆணையின்றி அப் பதவியில் நிலைத்திருக்க விரும்பாத டட்லி அவர்கள், அதற்காக மக்களது கருத்தினை அறிவதற்காக பாராளுமன்றத்தைக் கலைத்து உண்மையான ஒரு ஜனநாயகவாதியாக நின்று தேர்தலுக்கு முகங் கொடுக்க முடிவு செய்தார்.

1965 ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றியினைத் தொடர்ந்து பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அவர் சீ.பி.த சில்வா அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். 1964 ல் இடதுசாரிகளின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அடிப்படையாக அமைந்த சீ.பி.த சில்வா அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்காக அன்று டட்லியினால் விடுக்கப்பட்ட அழைப்பிலிருந்து டட்லி எப்படிப்பட்ட ஒரு தலைவர் என்பதனை நன்கு உணர்த்துகிறது.

அதிகாரத்தின் பின்னால் துரத்திச் செல்லாத டட்லி போன்ற சிரேஷ்ட ஒரு தலைவரகை; காண்பது மிகவும் அபூர்வமானதாகும். ‘உங்களது தலைமைத்துவத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்’ எனக் கூறி சீ.பீ.த சில்வா அவர்கள் டட்லியின் அழைப்பினை நிராகரித்தார்.

1965 முதல் 1970 வரை உரிய காலஎல்லையைப் பூர்த்தி செய்த டட்லி சேனாநாயக்க அவர்களின் ஆட்சிக் காலமானது முக்கியமான அனைத்து துறைகளிலும் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்ற சாதனை நிறைந்த ஒரு செயலாற்றுகையினைக் காட்டியது. அமைச்சர் எம்.டீ.பண்டா அவர்களின் கீழ் விவசாயத் துறையும், பிலிப் குணவர்தன அவர்களின் கீழ் கைத்தொழில் துறையும், ஈரியகொல்ல அவர்களின் கீழ் கல்வித் துறையும், யூ.பி.வன்னிநாயக்க அவர்களின் கீழ் நிதித் துறையும் ஒப்படைக்கப்பட்டு அவரால் வகிக்கப்பட்ட தலைமைத்துவம் பற்றிப் பார்க்கின்ற போது இந்த நிலைமையினை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை அரசியலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து அரசியல் தலைவர்களும் 65ல் டட்லி சேனாநாயக்கவுடன் இணைந்திருந்ததனைக் காண முடிந்தது. 50 ஆம் தசாப்தத்தில் சிங்கள மொழி முன்னணிக்குத் தலைமை தாங்கிய ஐ.எம்.ஆர்.ஏ.ஈரியகொல்ல, தேசிய விடுதலை முன்னணிக்குத் தலைமை தாங்கிய கே.எம்.பி.ராஜரத்ன, ‘இலங்கை மார்க்ஸிசவாதத்தின் தந்தை’ எனக் கருதப்பட்ட மார்க்ஸ்வாத பாசறையின் தேசியவாதக் கருத்தினைக் கொண்ட பிலிப் குணவர்தன அவர்கள், தெற்கிலிருந்து உருவாகி பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற பலத்த ஐக்கிய தேசிய கட்சி விரோதியாக செயற்பட்ட விஜயானந்த தஹநாயக்க போன்றே தமிழர் பக்கத்திலிருந்த எஸ்.ஜீ.வீ.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொண்ணம்பலம், திருச்செல்வம், அமிர்தலிங்கம் போன்றோரும், 65 – 75 காலப்பகுதிகளில் டட்லி சேனாநாயக்க அவர்களின் செல்வழியில் அவரை விட்டுப் பிரியாது இணைந்திருந்தார்கள்.

டட்லிக்கு சமீபமான எவரும் அவரை விட்டு நீங்காதிருந்தமைக்கான காரணம் யாதெனில் அவரை நெருங்குகின்ற அளிவிற்கு ஏற்ப அவர் யார் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவர்களால் முடிந்ததனால் ஆகும். தொலைவிலிருந்து அரசியல்வாதிகளிடமுள்ள நல்லவற்றைக் காணும் பெரும்பாலானவர்கள் அவருக்கு நெருக்கமாகிய சிறிது காலத்தின் பின்னர் அவர்களை விட்டு நீங்குவது இலங்கை அரசியலில் அடிக்கடி நிகழும் ஒரு விடயமாகும். நெருங்குகின்ற அளவிற்கு ஏற்ப அவரை விட்டு நீங்குவதற்கு நினைக்காத ஒரு தன்மையினை டட்லி சேனாநாயக்கவிடம் நாம் காண்கின்றோம்.

டட்லி நம்மைச் சேர்ந்த ஒருவர் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே எந்தவித பேதமும் இன்றி இலங்கை மக்கள் அவர் மீது அன்;பு செலுத்தினார்கள். அவர் மக்கள் அபிமானத்தைப் பெற்ற ஒரு தலைவராக இருந்தார். நேர்மையான ஒரு தலைவராக செயற்பட்டார். இலங்கை பேரபிமானம் நிறைந்த ஒரு நாடாக அமைவதற்கு பல் டட்லி சேனாநாக்காமார்கள் இந்த நாட்டில் உதிப்பதற்குப் பிரார்த்திக்கின்றேன்!

About the author

Administrator

Leave a Comment