அரசியல் மீள்பார்வை

நல்லாட்சி அரசில் அறிக்கைகளுக்கு நடப்பதென்ன?

Written by Administrator

நல்லாட்சி அரசில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரால் முன்வைக்கப்பட்ட பல அறிக்கைகள் எந்த உபயோகமுமின்றி இழுத்தடிக்கப்பட்டு வருவது புலனாகி வருகின்றன.

மாகாண எல்லை நிர்ணயத்துக்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி தமது அறிக்கையை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் சமர்ப்பித்தனர். இந்த அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட வேண்டியிருந்த போதும் அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமலிருக்கிறது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் உட்பட பலதரப்பினரிடமிருந்தும் அழுத்தங்கள் வந்த போதும் முடிவுறுத்தப்படாத இந்த அறிக்கை தேர்தல் தாமதத்துக்குக் காரணமாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல வில்பத்து சரணாலயத்துக்கு அருகில் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற முயன்றபோது வில்பத்து சரணாலயம் அழிக்கப்படுகிறது என்ற கூப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் தமது அறிக்கையை சமர்ப்பித்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக முன்மொழிவுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முன்வைத்த அறிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

About the author

Administrator

Leave a Comment