சமூகம் மீள்பார்வை

ஸ்ரீ-லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உயர்பீட உறுப்புரிமைக்கு 32 பேர் போட்டி

Written by Administrator

இலங்கையிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு இயங்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிடுவோர் விபரங்கள் பின்வருமாறு :-

 1. அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம் (லேக் ஹவுஸ்)
 2. அல்ஹாஜ் எம். இஸட். அஹமத் முனவ்வர் (வானொலி)
 3. ஜனாப் எஸ். ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்)
 4. அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட் (அமைச்சு ஊடக பிரிவு)
 5. மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)
 6. அல்ஹாஜ் ஜாவிட் முனவ்வர் (வானொலி)
 7. அல்ஹாஜ் கலைவாதி கலீல் (நவமணி)
 8. ஜனாப் எம். பி. எம். பைறூஸ் (விடிவெள்ளி)
 9. திருமதி புர்கான் பீ. இப்திகார் (வானொலி)
 10. ஜனாப் பியாஸ் முஹம்மட் (மீள்பார்வை)
 11. ஜனாப் ஏ. ஜே. எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடக பிரிவு)
 12. ஜனாப் நுஸ்கி முக்தார் (டெய்லி சிலோன்)
 13. ஜனாப் எம்.எப். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 14. ஜனாப் எஸ். எம். சர்ஜான் (டெய்லி சிலோன்)
 15. திருமதி ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி)
 16. திருமதி ஷாமிலா ஷெரீப் (வானொலி)
 17. அல்ஹாஜ் சுஐப் எம் காசிம் (அமைச்சு ஊடக பிரிவு)
 18. அல்ஹாஜ் ரிப்தி அலி (விடியல் இணைய தளம்)
 19. ஜனாப் எஸ். ஏல். அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 20. ஜனாப் பிஸ்ரின் மொஹம்மட் (யூ.ரி.வி தொலைக்காட்சி)
 21. அஷ்ஷெய்க் ஆதில் அலி சப்ரி (நவமணி)
 22. ஜனாப் ஏ. ஆர் பரீட் (தினகரன்)
 23. ஜனாப் பஸ்ஹான் நவாஸ் (ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
 24. ஜனாப் எம். எஸ். எம். ஸாஹிர் (நவமணி)
 25. ஜனாப் ஏ. மொஹம்மட் பாயிஸ் (அரசாங்க தகவல் திணைக்களம்)
 26. ஜனாப் ஐ. எம். இர்ஷாத் (எங்கள் தேசம்)
 27. ஜனாப் ஐ. ரியாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 28. ஜனாப் அனஸ் அப்பாஸ் (தேசிய ஊடக மையம்)
 29. ஜனாப் எம். லாபிர் (பிராந்திய ஊடகவியலாளர்)
 30. ஜனாப் ஏ. ஆர். முஹம்மட் ரிபாஸ் (வானொலி)
 31. டாக்டர் ஏ. ஆர். ஏ. ஹபீஸ் (அமைச்சு ஊடக பிரிவு)
 32. ஜனாப் பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)

About the author

Administrator

Leave a Comment