தகவல் களம் மாணவர் பகுதி

21 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள்

Written by Administrator
ஜூலை 27 ம் திகதி நிகழ இருக்கும் “Blood Moon” என்று அழைக்கப்படும் சந்திர கிரகணம்  1 மணிநேரமும் 43 நிமிடமும் நீடிக்கும். இதன் போது பூமியின்  இயற்கைமதி ஆகிய சந்திரன் கண்கவர் சிவப்பு அல்லது சிவப்பு-பழுப்பு நிறமாக மாறும். இந்த விண்  நிகழ்வு தொடக்கத்தில் இருந்து பூர்த்தியாக  கிட்டத்தட்ட 4 மணி நேரம் வரை நீடிக்கும்.
நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின்  சந்திரன் தொடர்பான விஞ்ஞானி நோவா பெட்ரோவின் கருத்துப்படி வட அமெரிக்காவின் பார்வையாளர்களுக்கு கிரகணம் தென்படாது. ஆனால்  ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் வானிலை சீராக இருக்குமாயின் கண்கவர் காட்சி ஒன்றை  பார்வையாளர்கள் அன்று காணக் கூடியதாக இருக்கும் .
நன்றி : space.com
தமிழில் ஹரீஸ் ஸாலிஹ்

About the author

Administrator

Leave a Comment