நாடுவது நலம்

இஸ்ரேலின் ஏற்றுமதிகளை தடுக்கும் சட்டம்: அயர்லாந்தின் அதிரடி நடவடிக்கை பாராட்டப்பட வேண்டும்

Written by Administrator

– இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் –

இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடான அயர்லாந்திலிருந்து முதலாவது எதிர்ப்புக் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் வலுக்கட்டாயமான முறையில் கைப்பற்றிக்கொண்டுள்ள பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்து வரும் பொருட்களை தனது நாட்டில் இறக்குமதி செய்வதை தடுக்கும் சட்டமொன்றை கடந்த ஜூலை 11ஆம் திகதி அயர்லாந்து செனட் சபையில் நிறைவேற்றியுள்ளது.

இச்சட்ட மூலத்தை வரைவதில் முன்னின்று செயலாற்றிய அயர்லாந்து பாராளுமன்றின் சட்டத்தரணி பிரன்ஸஸ் பிளக் இச்சட்டத்திற்கு அயர்லாந்து சட்ட வல்லுனர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் தனது வேண்டுகோளில் ‘இஸ்ரேல் பலஸ்தீன் எல்லையில் வசித்த மக்களை பலாத்காரமாக விரட்டியுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் பலஸ்தீன் விவசாய நிலங்களில் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு அவற்றை அயர்லாந்து நாட்டிற்கு ஏற்றுமதிசெய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் இலாபங்களை இஸ்ரேலுக்கு கிடைக்கும் வகையில் செய்துள்ளனர். இந்தச் செயலுக்கான எதிர்ப்பை தெரிவிக்கும் விடயமே இது.

இது முதலாவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கை. சட்டவிரோத குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பது ஒரு யுத்தக் குற்றமாகும். அயர்லாந்து எப்போதும் நீதி, நியாயத்திற்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பும் என்பதை நாம் உறுதியாகவே கூறிக்கொள்கிறோம். நாம் இன்று பலஸ்தீனுக்கு நீதியை நிலைநாட்டும் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க சந்தர்ப்பத்திற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளோம். இதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம்’

இச்சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு நடைபெற முன்னர் பலஸ்தீன் விடுதலை அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான செயற்பாட்டாளர் ஹனா அஷ்ராபி அயர்லாந்து சட்ட உருவாக்குனர்கள் மத்தியில் ‘நீங்கள் விசுவாசிக்கும் பெறுமதிகளுக்காக வேண்டி கிளர்ந்தெழுங்கள். இஸ்ரேல் புரியும் அட்டூழியங்களுக்கு பதில் வழங்கும் நடவடிக்கைக்கு தயாராகுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மைப் பலமுள்ள குயைnயெ குயடை கட்சி இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கடந்த ஜூன் 27ஆம் திகதி தெரிவித்ததை தொடர்ந்து ஜூலை 11ஆம் திகதி அயர்லாந்து பாராளுமன்றம் ஊழவெசழட ழக நுஉழழெஅல யுஉவiஎவைல ழுஉஉரில வுநசசவைழசல டீடைட 2018 எனும் பெயரில் நிறைவேற்றிய சட்டத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 20 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் ஏற்றுமதி செய்யும் பொருட்களை நிராகரித்த முதலாவது ஐரோப்பிய நாடாக அயர்லாந்து மாறியுள்ளது.

பலஸ்தீன் போராட்டத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நாடாகவும், போர் குற்றங்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் சிறந்ததொரு தேசமாகவும் அயர்லாந்து மாறியுள்ளது. அயர்லாந்தின் இந்த நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்தும் காட்டும் நடவடிக்கையாக உள்ளது. ஒரு சில உலக வல்லரசுகள் இஸ்ரேல் மேற்கொள்ளும் பல்வேறு யுத்தக்குற்றங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கும் தருணத்தில் அயர்லாந்து சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் பலஸ்தீன் விடுதலைக்காக வேண்டி மிகப்பெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

பலஸ்தீனின் மேற்குக் கரையினை இஸரேல் 1967 ஆம் ஆண்டு முதல் கைப்பற்றிக்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரேல் வசமுள்ள மேற்குக் கரையில் மாத்திரம் 7050000 இற்கு மேற்பட்ட சட்டவிரோதக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் அத்துமீறிப் பிரவேசித்து குடியேற்றங்களை அமைப்பது சர்வதேச குற்றவியல் சட்டத்தின் படி போர்க்குற்றமாக கருதப்படுகிறது. மனிதாபிமான சட்டத்தின் (ஐர்ஐ) படி அது தடைசெய்யப்பட வேண்டிய விடயமாகும்.

அயர்லாந்து செனட் சபை நிறைவேற்றிய இச்சட்டமானது ஏனைய தேசங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. அயர்லாந்து மற்றும் பலஸ்தீனப் போராட்டங்களுக்கு இடையில் மிகப்பெரும் பிணைப்புள்ளது. பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதற்கு பல நூற்றாண்டு காலம் அயர்லாந்து முன்னெடுத்த போராட்டத்திற்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குமிடையில் ஒருமித்த தன்மைகள் காணப்படுகின்றன. ஆபிரிக்க மக்களின் சுதந்திர போராட்டம் தொடர்பில் அயர்லாந்து எடுத்திருந்த நிலைப்பாடும் பலஸ்தீன் தொடர்பில் தற்போதுள்ள எடுத்துள்ள நிலைப்பாட்டுக்குமிடையில் வித்தியாசங்களில்லை. இதன் மூலம் ஐரோப்பாவுக்கும் உலக மக்களுக்கும் முன்மாதிரியொன்றை வழங்கியுள்ளது.

Infografik Siedlungen im Westjordanland ENGLISCH

About the author

Administrator

Leave a Comment