பலஸ்தீன

காஸா சிறுவர்கள் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் படுகொலை

Written by Administrator

வீட்டின் மேற்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை இஸ்ரேலிய விமானம் குறி வைத்துத் தாக்கியதில் அச்சிறுவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் காஸாவில் இடம்பெற்றுள்ளது. 16 வயதான லுவைய் கலீல் மற்றும் 15 வயதான ஆமிர் அல் இம்ரா ஆகிய சிறுவர்களே காஸாவில் வைத்து இஸ்ரேலிய வான் படையால் கொல்லப்பட்டுள்ளனர்.

லுவைஸ் கலீலின் தாய், சம்பவம் குறித்து விபரிக்கும்போது “ஒரு பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது. மேலே எனது மகனுக்கு ஏதொ நடந்து விட்டது என்று உணர்ந்து கொண்டேன். அங்கு சென்று பார்த்தபோது எனது மகனைச் சூழ மக்கள் குழுமியிருந்ததைக் கண்டேன்.”

சம்பவம் நடந்தபோது லுவைஸ் கலீலின் தாய் சற்றுத் தொலைவிலிருந்து வருகை தந்துகொண்டிருந்தார். மகனைப் பார்த்தவுடன் அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அது போன்றே ஆமிர் இம்ரா இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.

கடந்த 15 ஆம் திகதி காஸாவிலுள்ள ஹமாஸின் காப்பரண்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன்போது எந்த சம்பந்தமும் இல்லாத இரண்டு சிறுவர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டதோடு மேலும் 30 பலஸ்தீனர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற காஸா மீதான தாக்குதலுக்குப் பின்னர் நூற்றுக்கணக்கான காஸா மக்கள் இத்தகைய தனித் தனி தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். 2014 தாக்குதலில் ஒரே முறையில் 2250 பொது மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்ட இரு சிறுவர்களும் மத்திய கஸா வீதியில் வசிக்கின்றவர்கள். ஒரே வகுப்பறை நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Administrator

Leave a Comment