உலக செய்திகள் சர்வதேசம் பலஸ்தீன பிரதான செய்திகள்

12 ஆண்டுகால முற்றுகையின் கீழ் 1000 காஸா மக்கள் உயிரிழப்பு

Written by Web Writer

12 ஆண்டுகால  முற்றுகையின் கீழ் 1000 காஸா மக்கள் உயிரிழப்பு

தரை, ஆகாய, கடல் வழி முற்றுகைக்கு உட்பட்டுள்ள காஸாவில் இதுவரை பொருளாதாரத் தடையின் காரணமாக 1000 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு இஸ்ரேல் விதித்த பொருளாதாரத் தடையினால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று காஸாவில் இயங்கும் மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்நிறுவனங்களின் இணைப்பாளரான அஹமத் அல் குர்த் கருத்து வெளியிடுகையில், “கடந்த சில நாட்களில் 5 தாய்மார்கள் குறைமாதக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர். மருத்துவ வசதிகளின் போதாமையே இதற்குக் காரணம். இதுவரை உயிரிழந்த 1000 பேரில் சுகாதார மற்றும் மருத்துவ வசதியின்மையால் இறந்தோர் தொகை 450 ஆகும். மின்சாரம், குடிநீர் என்பவற்றுக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காஸா மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.”

அறுவைச் சகிச்சைகளை மேற்கொள்வதற்குப் போதிய மருத்துவ வசதிகள் வைத்தியசாலைகளில் இல்லை. இதனால் 100 பேர் அளவில் உயிரிழந்துள்ளனர். மின்சார வசதியின்மையால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயத் துறையில் பணியாற்றியோர் இஸ்ரேலின் ஆகாயவழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

வாழ்வாதாரத்தைப் பெறுவதற்கான சகல வழிகளும் அடைக்கப்பட்டு, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், காஸா மக்கள் சுத்தமான குடிநீர் தட்டுப்பாட்டையும் போஷாக்கான உணவுத் தட்டுப்பாட்டையும் எதிர்கொண்டிருப்பது அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள குரூரமான குற்றமாகும். இதற்கு இஸ்ரேலும் சர்வதேச நாடுகளும் பதில் கூற வேண்டும் என அஹ்மத் குர்த் தெரிவித்துள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment