பிராந்திய செய்திகள்

“ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்” நூல் வெளியீட்டு விழா

Written by Administrator
– AR Sajith Ali –
கஹடகஸ்திகிலிய,வெலிகொள்ளாவயைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி எழுதிய “ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) 09:30 மணியளவில் மீஸானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அல் ஹாஜ் இஹ்திஸாம் தலைமையில்  அக்குறணை, மீஸானியா அரபுக் கல்லூரி கேடபோர் கூடத்தில் நடந்தேறியது.
கல்வி மேம்பாட்டுக்கான அல் கைர்  நிறுவனம் ஏற்பாடு செய்த இவ்விழாவில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அஷ்-ஷெய்க் மஸாஹிர் நளீமி கலந்து சிறப்பித்ததுடன், நூல் விமர்சன உரையை உண்மை உதயம் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்-ஷெய்க் இஸ்மாயில் (ஸலபி) நிகழ்த்தினார்.

About the author

Administrator

Leave a Comment