களுத்துறையில் ஊடக செயலமர்வு

25

களுத்துறை பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று எதிர்வரும் 4 ஆம் திகதி சனிக்கிழமை காலை களுத்துறை காடன் பீச் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதனை, இலங்கை பத்திரிகை பேரவை களுத்துறை மாவட்ட செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இச் செயலமர்வில் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு பத்திரிகை பேரவையினால் பகலுணவு மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.