‘கிரிக்கெட் மாஸ்டர்’ இலங்கையில் அறிமுகம்

45

இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் ‘கிரிக்கெட் மாஸ்டர்’ முறை அண்மையில் கந்தானை கே சொன் இல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாதின் தலைமையில் இவ் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. செயற்கை அறை ஒன்றில் விளையாடினாலும் நேரடியாக விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது போன்ற ஒரு அனுபவத்தை இது வழங்குகின்றது. உலகில் உள்ள எந்த ஒரு பந்து வீச்சாளரைத் தெரிவு செய்தாலும் அந்த வீரர் திரையில் தோன்றி பந்து வீசுவார். அவரது பந்து விடுபடும் போது கிரிக்கெட் இயந்திரம் மூலம் பந்து வீசப்படும். அதனை முகம்கொடுத்து விளையாடுவதே இந்த கிரிக்கெட் மாஸ்டர் விளையாட்டு.

இங்கு விளையாட்டு மைதானம் தொழில் நுட்ப உதவி கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகம் பிரபலமான இம்முறை, இலங்கையில் பயிற்சிக்காக அறிமுப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.