உலக செய்திகள் சர்வதேசம் பலஸ்தீன

இஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து அரபு எம்.பி இராஜினாமா

Written by Web Writer

இஸ்ரேலின் ‘யூத’ பிரகடனத்தை எதிர்த்து இஸ்ரேலிய அறபு அரசியல்வாதி தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இந்த புதிய சட்டம் இஸ்ரேலில் உள்ள அரபு சிறுபான்மையினரின் கோபத்தை தூண்டியுள்ளது.

இஸ்ரேலை யூத மக்களின் தேசிய அரசாக பிரகடனம் செய்யும் சர்ச்சைக்குரிய புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அன்றைய தினம் பாராளுமன்றத்தில் வைத்தே சட்ட வரைவை கிழித்து எறிந்து அரபு எம்.பி கள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே சுஹைர் பஹ்லுல் (63 வயது) இந்த அதிரடி விலகலை அறிவித்துள்ளார். இஸ்ரேல் இனவாதத்துடன் அழிவை ஏற்படுத்தும் விதமாக நடந்துகொள்கிறது என்றும் இஸ்ரேலின் சமத்துவப் பாதையில் இருந்து அரபு சமூகம் அகற்றப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

About the author

Web Writer

Leave a Comment