Scholarship கல்வி பிராந்திய செய்திகள் மாணவர் பகுதி

க.பொ.த உ/த மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

Written by Web Writer

வெலிகம பத்ர் மன்றம் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

2017 இல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தி அடைந்து உயர் கல்வியைத் தொடர்கின்ற வெலிகமையை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட திறமையும் தகைமையும் உள்ள மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சுய விலாசமிட்டு முத்திரை ஒட்டப்பட்ட கடித உறை ஒன்றினை அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை பெறுவதற்கான இறுதித் திகதி ஆகஸ்டு மாதம் 7 ஆம் திகதி ஆகும்.

எனவே, செயலாளர், பத்ர் மன்றம், இல.46, ஜின்னா வீதி, வெலிகம எனும் விலாசத்துக்கு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதிக்கு முன் அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

About the author

Web Writer

Leave a Comment