உள்நாட்டு செய்திகள் பிராந்திய செய்திகள் மாணவர் பகுதி

மாணவர்கள் மத்தியில் சமய நல்லிணக்க நிகழ்வுகள்

Written by Web Writer

ளுத்துறை மாவட்ட சமயப் பாடசாலை மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை வலுவூட்டும் வகையிலான நிகழ்ச்சியொன்று எதிர்வரும் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சமய பாடசாலைகளில் கல்வி பயிலும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 160 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ளனர்.

பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல், களுத்துறை ஸ்ரீ வேலாயுதர் சுவாமி கோயில், அளுத்கமை கந்த விகாரை மற்றும் பேருவளை பொல்கொமுவ சாந்தஆனா கத்தோலிக்க தேவாலயம் போன்ற மதத்தலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் குறித்த மாணவர்கள் கலந்து கொள்வர்.

About the author

Web Writer

Leave a Comment