உள்நாட்டு செய்திகள் கல்வி மாணவர் பகுதி

இரண்டாம் தவணைக்காக வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்படும்

Written by Web Writer

தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல அரச பாடசாலைகள் இரண்டாம் தவணை நாளை மறுதினம் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளது.

அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் முஸ்லிம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

About the author

Web Writer

Leave a Comment