இலக்கியம்

இண்டர்நெட், ஸ்மார்ட் போன்களுக்கு அப்பாலும் உலகம்

Written by Administrator

ஒரு வங்கியில் வயதான தனது தந்தை நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை கண்ட மகன், தந்தைக்கு அருகில் மெதுவாக சென்று சொன்னார் “வாப்பா! இந்த வயதான காலத்தில் ஏன் இப்படி வரிசையில் நின்று கஷ்ரப்படுகிறீர்கள். இப்போது தொழிநுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. E-banking என்று ஒரு வசதி இருக்கின்றது வீட்டிலிருந்தே வங்கிக்கு போகாமல் எல்லாம் வேலையையும் செய்யலாம்”

மகன் சொன்னதும் ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தினார் தந்தை.

மகன் தொடர்ந்து சொன்னார் “வாப்பா! அது மட்டும் இல்லை, Self banking என்று ஒரு வசதியுள்ளது. உங்களுக்கு வசதியான நேரத்தில், ஆக்கள் குறைந்த நேரத்தில் நீங்கள் சென்று உங்கள் வேலைகளை இலகுவாக நீங்களே செய்துவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்திடலாம்”
தந்தை அவதானமாகவும் ஆர்வமாகவும் தொடர்ந்தும் கேட்டுக் கொண்டிருந்தார்.

“வாப்பா! நீங்கள் கடைகளுக்கும் போகத்தேவையில்லை Internet ல் ஓடர் கொடுத்தால் போதும் தேவையான பொருட்கள் வீட்டுக்கே டெலிவரியாகிடும். அந்தளவு தொழிநுட்பம் வளர்ந்துவிட்டது. மரக்கறி தொடக்கம் எல்லாப் பொருட்களும் வாங்கலாம் என்றால் பாருங்களேன்”

தன் மகனைப் பார்த்து சிரித்துவிட்டு தந்தை சொன்னார். “மகனே நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இங்கு வந்து நின்ற இந்த நேரத்திற்குள் நீண்ட நாளைக்கு பிறகு எனது நண்பர்கள் இருவரை சந்தித்தேன். Bank slip நிறப்பத் தெரியாத மூன்று வயோதிபர்களுக்கு அதை நிறப்பிக் கொடுத்தேன். இதோ என் முன்பு நிற்கும் இந்த மனிதர் என்னோடு அறிமுகமானார். நமது தூரத்து உறவினர் இங்கு வேலை செய்கிறார் அவரையும் சந்தித்தேன்”

“வீட்டிலிருந்து நீங்கள் சொன்னவற்றையெல்லாம செய்யலாம் ஆனாலும் மனித உறவுகளை அவை எனக்கு கொண்டு வந்து சேர்க்காது.

பார்! நான் காய்ச்சலாக இருந்த போது நான் வழமையாக செல்லும் கடைக்காரர் வந்து என்னை அன்பாக நலம் விசாரித்துச் சென்றார். நீ பஸ் இல்லாமல் நிற்கும்போது உன்னை வீடு வரைக்கும் கொண்டு வந்துவிட்டவர் நமது ஹார்ட்வெயார் கடைக்காரர் தானே.
இந்த இண்டர் நெட், ஸ்மார்ட் போன், கொம்பியூட்டர் இவற்றையும் விட உலகம் விசாலமானது மகனே!”

 – via S. ரிஸான் –

About the author

Administrator

Leave a Comment