அரசியல் உள்நாட்டு செய்திகள்

திஹாரிக்கு பொது நூலகம் வருகிறது

Written by Web Writer

திஹாரிக்கு பொது நூலகம் வருகிறது!

NFGG அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறது…

பிரதமரின் 50 இலட்சம் நிதியொதுக்கீட்டில் திஹாரியில் பொது நூலகம் அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை NFGG ஆரம்பித்து வைத்து, அதற்கான காணியையும் தனவந்தர் ஒருவரின் உதவியுடன் பெற்றுக்கொடுத்துள்ளது.

இது குறித்த பேச்சுவார்த்தை, இன்று (05), NFGG பிரதேச சபை உறுப்பினர் எம்.ஆர்.எம். ரஹீம் அவர்களின் தலைமையில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஐ.தே.க. அத்தனகல்ல அமைப்பளர் சந்திரசோம சரணலால் அவர்களுக்கும் இடையில் நடைபெற்றது.

திஹாரியில் நூலகம் அமைப்பதற்கு பிரதமரின் நிதியைப் பெற்றுத் தருவதில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்ட, சந்திரசோம சரணலால் அவர்களுக்கு திஹாரிய NFGG செயற்குழு ஊர் மக்கள் சார்பாக நன்றியையும் தெரிவித்தது.

அத்தனகல்ல உள்ளுராட்சி தேர்தல் NFGG ஒரு ஆசனத்தை வென்றதும், தமக்கு ஆதரவு வழங்குமாறு எல்லாக் கட்சிகளும் NFGG யை நாடி வந்தன. ஆனால், எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்க முன்வராத NFGG , ‘திஹாரியில் நூலகம்’ அமைக்க வேண்டுமென்ற தமது கோரிக்கைக்கு உதவினால் மாத்திரமே ஆதரவு வழங்குவதாக உறுதியாகத் தெரிவித்து வந்தது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐ.தே.க. அத்தனகல்ல பிரதேச அமைப்பாளர் சந்திரசோம சரணலாலுக்கு, NFGG தமது கோரிக்கையை எழுத்து மூலம் வழங்கியது. எனவே, NFGG க்கு வாக்களித்ததன் பிரகாரம், பிரதமரின் நிதியொதுக்கீட்டிலிருந்து நூலகம் அமைப்பதற்கான நிதியொதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார் திரு. சந்திரசோம சரணலால்.

எனவே, இந்த நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி நூலகத்தை அமைப்பதற்கான காணியை NFGG யின் தனவந்தர் ஒருவர் தந்துள்ளார். நூலகம் வெகு சீக்கரம் அமைக்கப்பட்டு, பொது மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்படும்.

About the author

Web Writer

Leave a Comment