இலக்கியம் உள்நாட்டு செய்திகள் சாதனையாளர்கள் மீள்பார்வை

‘தேசிய சாதனை மடல்’ நூல் வெளியீட்டு விழா

Written by Web Writer

அனஸ் அப்பாஸ் தொகுத்து எழுதிய தேசிய சாதனை மடல் என்ற நூல் வெளியீடு நேற்று(07) ஆம் திகதி சசெவ்வாய்க்கிழமை பி.ப. கொழும்பு தபாலக கேட்போர் கூடத்தில் சர்வதேச பத்திரிகை ஆசிரியர் அஷ்ஷெய்க் ரவூப் ஸெயின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் நூல் அறிமுகவுரையை நிகழ்த்தினார் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள். தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சிறப்புரை வழங்க நூலாசிரியர் அறிமுக உரையை மீள்பார்வை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பியாஸ் முகம்மது நிகழ்த்தினார். பிரதம அதிதியாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் கௌரவ எம்.எச். ஹலீம் பா. உ. கலந்து கொண்டு நூலில் குறிப்பிடப்பட்டிருந்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களையும் நூல் பிரதிகளையும் வழங்கி வைத்தார்.

மண்டபம் நிறைந்து வழிந்த நிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வை மீள்பார்வை மீடியா, பலகத்துறைக் கலை இலக்கிய வட்டம், சமூக ஊடக நண்பர்கள் வட்டம் ஆகியன இணைந்து நடத்தியிருந்தன.

About the author

Web Writer

Leave a Comment