உள்நாட்டு செய்திகள் பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறை

Written by Web Writer

ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றை அவமதித்ததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரைக் குற்றவாளியாகக் கண்ட மேல்முறையீட்டு நீதிமன்றம் 19 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறைத் தண்டனையை ஆறு வருடங்கள் அனுபவிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி வழக்கில் ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியென நீதிமன்றம், நேற்று(08) தீர்மானத்தது.

இதேவேளை, வழக்கின் பிரதிவாதியான ஞானசார தேரர் திடீர் சுகவீனம் காரணமாக நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருக்கவில்லை. சுகயீனமடைந்த நிலையில், ஸ்ரீ ஜயவர்தன புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக அவர் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

About the author

Web Writer

Leave a Comment