Features சிறப்புக்கட்டுரைகள் ஷரீஆ

துல்-ஹஜ் முதல் பத்து நாட்கள்

Written by Web Writer

முஹம்மத் பகீஹுத்தீன் (நளீமி)

எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட கருணையின் காரணமாக ஆண்டுதோரும் நல்லமல்கள் செய்வதற்கான பல பருவ காலங்களை ஏற்படுத்தியுள்ளான். அவை அல்லாஹ்வை நெருங்குவதற்கான அரிய சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில்தான் துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களும் அமைந்துள்ளன. இறையுதவியால் பாக்கியம் நிறைந்த இந்த பத்து நாட்களையும் சிறப்பாக பயன்படுத்த அல்லாஹ் அருள்புரிவானாக!

துல்-ஹஜ்; முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்
1) அல்-குர்ஆன் சூரா பஜ்ரின் ஆரம்ப வசனங்களில் “வைகறை பொழுதின் மீதும், பத்து இரவுகளின் மீதும்சத்தியமாக” என்று தொடங்குகின்றது. இங்கு அல்லாஹ் சத்தியம் செய்து கண்ணியப் படுத்தியுள்ள “இரவுகள்” என்பது துல் ஹஜ் மாத்தின் முதல் பத்து இரவுகளே என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2) இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துல்ஹஜ் முதல் 10 நாட்களில் செய்யக்கூடிய நல்லமல்கள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவையாகும். வேறு எந்தநாட்களில் செய்யும் நல்லமல்ளும் அதற்கு ஈடாகமாட்டாது. அப்போது அல்லாஹ்வின் தூதரே இறைபாதையில் போராடுவதைவிடவுமா? என நபித் தோழர்கள் கேட்டார்கள். ஆம் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதைவிடவும் அந்தநாட்களில் செய்யும் அமல்கள் எனக்கு மிகவும் விருப்பமானது. ஆனால் ஒருவன் அல்லாஹ்வின் பாதையில் போராடப் புறப்பட்டு, தன் பொருளையும் உயிரையும் இழந்து ‘ஹீதான அந்த மனிதனைத் தவிர என ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் புகாரி

3) சூரதுல் ஹஜ்ஜின் 28வது வசனத்தில் “அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூறுவதற்காக” என்று வந்துள்ள அல்குர்ஆன் வசனமும் துல்ஹஜ் முதல் பத்து நாட்களைத்தான் குறிக்கும் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

4) ரஸுல் (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களிலும் செய்யும் அமல்கள் அல்லாஹ்விடத்தில் மிகவும் மகத்தானதாகவும், விருப்பத்திற்குரியதாகவும் உள்ளன. இது போல் அந்தஸ்தும் உயர்வும் கொண்ட வேறு எந்த நாட்களும் கிடையாது. எனவே இந்த நாட்களில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஆகிய திக்ர்களை அதிகமதிகம் கூறுங்கள். (நூல் முஸ்லிம்)

5) இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களும் மிகவும் மகத்தானது என சிலாகித்து கூறப்பட்டிருப்பதன் காரணம், அந்த நாட்களில் தீனுல் இஸ்லாத்தின் பிரதான வணக்கவழிபாடுகள் யாவும் ஒருங்கே அமையப் பெற்றிருப்பதாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், தர்மம், ஆகிய யாவும் இந்த நாட்களில் முக்கிய அமல்களாக நிறைவேற்றப்படுகின்றன. இந்தநிலை வேறு எந்த நாட்களிலும் சாத்தியப்படமாட்டாது.

உண்மையில் இந்தநாட்கள் கருணை மிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்கிய அரிய வாய்ப்பாகும். நாம் அவற்றை கவனமாகபயன்படுத்தி இறை தொடர்பை ஏற்படுத்துவதற்கும் அவனை நெருங்குவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

அந்த பத்து நாட்களில் செய்ய முடியுமான விரும்பத்தக்க சில இபாதத்கள் வருமாறு:

1) நோன்பு பிடித்தல்
முதல் ஒன்பது நாட்களும் நோன்பு பிடிப்பது விரும்பத்தக்க செயலாகும். ரஸுல் (ஸல்) அவர்கள் துல் ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்களும் நோன்பு பிடித்தார்கள் என ஹுனைதா (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (நூல்: அஹ்மத், நஸாஈ, அபூ தாவுத்) அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று கூறியுள்ளார்கள். மேலும் நபியவர்களின் மனைவிமார்களில் ஒருவரான ஹப்ஸா (ரழி) அவர்களும் இந்த நாட்களில் ரஸுல் (ஸல்) நோன்பு பிடித்தார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள். (ஆதாரம்: அபூ தாவுத்) எனவே இந்த நாட்களில் முடிந்தளவு நோன்பு இருப்பது அல்லாஹ்வை நெருங்குவதற்தான சிறந்த வழிமுறையாகும்.

2) தக்பீர் முழங்குதல்
இப்னுஉமர் (ரழி) அவர்களும் அபு+ ஹுரைரா (ரழி) அவர்களும் இந் நாட்களில் கடைவீதிக்கு போகும் போது தக்பீர் சொல்லுவார்கள். இவ்விருவரும் எழுப்பும் தக்பீரோசை கேட்டு சூழவுள்ள மக்களும் தக்பீர் முழங்குவார்கள்.
உமர் (ரழி) அவர்கள் மினாவில் கழிக்கின்ற நாட்களிலும், வீதிகளிலும், கூடாரங்களிலும் சப்தத்தை உயர்த்தி தக்பீர் சொல்லுவார்கள். அந்த தக்பீர் முழக்கத்தால் மினாவெங்கும் அதிர்ந்துபோய் நிற்கும்.
அறபா நாளின் சுபஹ் தொழுகையிலிருந்து துல்ஹஜ் பிறை 13ம் நாள் அஸர் தொழுகை வரையான காலப்பகுதியில் ஐங்காலத் தொழுகைக்குப் பின் தக்பீர்சொல்லுவது சுன்னத்தான அமலாகும்.

3) இறைவழிபாட்டில் விசேட ஆர்வம் செலுத்துதல்.
அன்றாடம் செய்யவேண்டிய வழமையான கடமைகளில் அதி கூடிய கரிசனை செலுத்துவோம்.

1. ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றல்.
2. ஐங்காலத் தொழுகைகளின் முன்பின் ஸுன்னத்களை நிறைவேற்றல்.
3. தொழுகைக்கு பின் சற்று நேரம் பொறுமையாக இருந்து பிராத்தனையில் ஈடுபடுதல்
4. ளுஹா தொழுகையை நிறைவேற்றல்.
5. வித்ர் தொழுகையை தவராமல் நிறைவேற்றல்.
6. ஜும்மாவிற்கு முன்கூட்டியே தயாராகுதல்.
7. பள்ளிவாசல் சூழலிலேயே அதிக நேரங்களை கழிப்பதற்கு முயற்சித்தல்

4) அறபாநோன்பு
அறாபா நோன்பு மிக முக்கியமான சுன்னாவாகும். “அறபா நோன்பு அதற்கு முந்திய ஆண்டின் பாவங்களுக்கும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களுக்கும் குற்றப்பரிகாரமாக அமையும் என நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கின்றேன்” என ரஸுல் (ஸல்) கூறியதாக கதாதா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

5) உழ்ஹிய்யா கொடுத்தல்
ஹஜ்ஐ{ப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றியதன் பின்னர் செய்யவேண்டிய கட்டாய சுன்னாத்தாக குர்பான் கொடுப்பது அமைந்துள்ளது. 10ம் நாளான பெருநாள் தினத்திலும் தொடர;ந்து வரும் 11,12,13 ஆகிய மூன்று நாட்களிலும் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கே உழ்ஹிய்யா (குர்பான்) எனப்படும். ரஸுல் (ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வௌ;ளை நிற ஆடுகளை குர்பான் கொடுத்தார்கள் என்ற ஹதீஸ் ஸஹீஹுல் புகாரயிpல் பதிவாகியுள்ளது. “வசதி வாய்ப்பு இருந்தும் யார் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் எமது தொழுகை நடக்குமிடத்துக்கு நெருங்கவும் வேண்டாம்.” என ரஸுல் ( ஸல்) அவர்கள் கூறியதாக அபு+ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் அஹ்மத்)

6) ஸதகா கொடுத்தல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் “ஸதகாவானது செல்வத்தில் எந்தக் குறையையும் ஏற்படுத்தமாட்டாது. (முஸ்லிம்)

7) குர்ஆன் ஓதுதல்

பத்துநாட்களிலும் ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் குர்ஆன் ஓதுவது சிறபாகும். வசதிற்கேற்ப பத்து பத்து நிமிடங்களாக அல்லது 15 நிடங்களாக நேரங்களை பிரித்தும் ஓதலாம். ஓதும் போது மெதுவாகவும் அழகாகவும் ஓதவேண்டும். ஐங்காலத் தொழுகைக்கு பின் இரண்டு பக்கங்கள் ஓதினாலே ஒரு ஜுஸ்உ ஓத முடியும்.

8) இரவுநேரங்களில் நின்றுவணங்குதல்

முஃமின்களின் பண்புகளை விவரிக்கம் அல்குர்ஆன் “இரவில் வெகுசொற்ப நேரமே அவர்கள் தூங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்” எனக் கூறுகிறது. (ஸுரா அத்தாரியாத் 17) எனவே இந்த பத்து நாட்களையும் தஹஜ்ஜத் தொழுகைக்கான பயிற்சிக் காலமாக அமைத்துக் கொள்வது சிறந்தது.
“ஒரு முஃமினின் கௌரவம், மேன்மை இரவு நேரத் தொழுகையை நிறைவேற்றுவதாகும்” என நபி (ஸல்) அவர்கள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்கள்.

9) மூன்றுநேரங்களை உயிர்ப்பித்தல்
பஜ்ருக்கு முந்திய நேரத்யுதைம், சுபஹ் தொழுகைக்குபின் சூரியன் உதயமாகும் வரையுள்ள நேரத்தையம், மக்ரிபுக்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தையும் திக்ர் செய்வதற்கும், துஆ கேட்பதற்தும், பாவமன்னிப்பில் ஈடுபடுவதற்கம் ஒதுக்குதல்.

10) பாவமன்னிப்புகேட்டல்

ரஸுல் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே பாவமன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள். நான் ஒருநாளைக்கு நூறு தடவை வபாவமீட்சி தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுகிறேன்.” ( முஸ்லிம் )

About the author

Web Writer

Leave a Comment